தல அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா? இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பரபரப்பு விளக்கம்

By

Recommended Video

சத்தியமா லிங்கா வெற்றி படம்ங்க.. | KS RAVIKUMAR INTERVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக வந்த தகவல் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை'யை இயக்கிய வினோத் இயக்குகிறார்.

போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

இந்தப் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, மீனா, குஷ்பு உட்பட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார்

கே.எஸ்.ரவிகுமார்

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக செய்திகள் வெளியாயின. சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய்தி வேகமாக பரவியது.

போலி கணக்கு

போலி கணக்கு

இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், என் பெயரில் உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து, அஜித்குமார் படத்தை நான் இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. எனக்கு ட்விட்டர் கணக்கு இல்லை. அது என் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட கணக்கு.

பொய் தகவல்

பொய் தகவல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அஜித் படத்தை நான் இயக்குவதாக வரும் தகவல்கள் தவறான வை. நேற்றில் இருந்து இந்தப் பொய் தகவல் வேகமாக பரவி வருகிறது. அதையும் என் பெயரில் உள்ள அந்த ட்விட்டர் கணக்கையும் ரசிகர்களும் மீடியாவும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார், அஜித் நடிப்பில் ஏற்கனவே வில்லன், வரலாறு படங்களை இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X