மகள் திருமணம்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு வைத்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்!

கே எஸ் ரவிக்குமாரின் மகள் ஜனனி - ஆர் சதீஷ்குமார் திருமணம் வரும் மே 3 -ம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கிறது. அன்று மாலை வரவேற்பு நடக்கிறது.
இந்த திருமணத்துக்கு நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட திரையுலகமே திரண்டு வர உள்ளது.
முக்கியப் பிரமுகர்களுக்கு தானே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.
இன்று காலை தலைமைச்செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து அழைப்பிதழ் வைத்தார். ரவிக்குமாரை வரவேற்ற முதல்வர், திருமணத்துக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மகளின் திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென கேட்டுக் கொண்டார் ரவிக்குமார். கட்டாயம் வருவதாக முதல்வர் அவரிடம் கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications