பிரபல இயக்குநரின் மகனும் ஹீரோவாகிறார்… கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன சூப்பர் தகவல் !
சென்னை : பிரபல இயக்குநரின் மகன் என்னுடைய அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா. இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு,சுரேஷ் மேனன், பிளாக் பாண்டி உள்பட பலர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் இன்று நடந்தது, இதில் பேசிய கே.எஸ். ரவிக்குமார், பிரபல இயக்குநரின் மகன் என்னுடைய அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுக உள்ளதாக கூறினார்.

கூகுள் குட்டப்பா
இதில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநராக, நடிகராக இருந்த என்னை கமல் தான் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தார். ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.0 படத்திற்கு பிறகு கூகுள் குட்டப்பா படத்தைத் தயாரித்திருக்கிறேன். இப்படத்தை என்னிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணன் மற்றும் சபரி கிரிசன் இயக்கி உள்ளனர். மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் கூகுள் குட்டப்பா என்றார்.

வாரிசு நடிகர்
தொடர்ந்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார். கூகுள் குட்டப்பா திரைப்படத்தை அடுத்து, அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளேன். அதில் என் குருநாதர் விக்ரமனின் வாரிசு கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றார்.

இளம் இயக்குநர்கள் மதிப்பதில்லை
இந்த விழாவில் பேசிய ஆர்.வி. உதயக்குமார், இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.மூத்த இயக்குநர்களின் காலில் விழுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களை அவமதிக்காதீர்கள் அந்த பண்பு இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று ஆர்.வி.உதயகுமார் பேசினார்.
Recommended Video

பலர் கலந்து கொண்டனர்
கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர். வி உதயகுமார், பேரரசு, கவுரவ் நாராயணன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











