இப்படி ஏமாத்திட்டாரே குஞ்சுமோன்...நிஜமாவே ஜெட்னில்மேன் 2 படம் தான் எடுக்க போறாங்களா?
சென்னை : ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோயின் யார் என்பதை ஏற்கனவே அறிவித்து விட்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகை பற்றிய முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
1993 ம் ஆண்டு ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்து வெளிவந்த பிளாக் பஸ்டர் படம் ஜென்டில்மேன். இந்த படத்தின் மூலம் தான் ஷங்கர், தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானார். கே.டி.குஞ்சுமோன் இந்த படத்தை தயாரித்திருந்தார். மதுபாலா, சுபஸ்ரீ, கவுண்டமணி, செந்தில், மனோரமா, நம்பியார், சரண்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜெட்டில்மேன் 2 அறிவிப்பு
கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவதாக கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார். ஆனால் டைரக்டர், ஹீரோ யார் என்பதை அறிவிக்காமல் இசையமைப்பாளரை மட்டும் அறிவித்தார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இசையமைத்த கீரவாணி தான் ஜென்டிமேன் 2 படத்திற்கும் இசையமைக்க போகிறார் என அறிவித்தார்.

ஹீரோயின் நயன்தாராவா
ஜென்டில்மேன் 2 படத்தை குஞ்சுமோன் உறுதி செய்ததால் ஹீரோ யாராக இருப்பார். டைரக்டர் ஷங்கர் இல்லையா என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர். அதே சமயம் அர்ஜுன் தான் ஜென்டில்மேன் 2 படத்திலும் ஹீரோ என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. இதற்கிடையில் ஹீரோயினாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதனால் ஹீரோ நிச்சயம் பெரிய ஹீரோவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி ஏமாற்றி விட்டாரே
ஆனால் படையப்பா படத்தில் செந்திலுக்கு பெண் பார்க்க போகும் காமெடியை போல், ஜென்டில்மேன் 2 படத்தின் ஹீரோயின் நயன்தாரா தான். ஆனால் அனைவரும் எதிர்பார்த்தது போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கிடையாது. மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி என அறிவித்தார் குஞ்சுமோன். என்ன இவர் இப்படி ஏமாற்றி விட்டாரே என அனைவரும் நொந்து கொண்டனர்.

மறுபடியும் ஏமாத்திட்டாரே
இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படத்தில் மற்றொரு முன்னணி நடிகை இணைய உள்ளதாகவும், அவரை பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக நேற்று ட்விட்டரில் கூறி இருந்தார். யாராவது பெரிய நடிகை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பிரியா லால் இந்த படத்தில் இணைய உள்ளதாக இன்று அறிவித்தார். தெலுங்கு, மலையாள நடிகையான பிரியா லால், தமிழில் ஜீனியஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். ஐக்கிய அரபு நாடுகளில் பிறந்த பிரியா, இங்கிலாந்தில் வளர்ந்தவர்.

எப்போ சொல்லுவீங்க
இவர் என்ன இசையமைப்பாளர், ஹீரோயின், நடிகை என அறிமுகம் செய்து வருகிறார். முக்கியமான, அனைவரும் எதிர்பார்க்கும் ஹீரோ, டைரக்டர் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடுவார். ஒருவேளை அது யார் என்பதை அவரே இன்னும் முடிவு செய்யவில்லை போல. எப்போது முடிவு செய்து, அறிவித்து, படத்தின் ஷுட்டிங்கை ஆரம்பிக்க போகிறார்கள் என நெட்டிசன்கள் கேட்க துவங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











