படத்திற்காக உடல் எடையை கூட்டும் நடிகர், நடிகைகள்
சென்னை : நடிகர், நடிகைகள் தாங்களின் நடிக்கும் படத்தின் கேரக்டருக்கு ஏற்ப உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. முன்பெல்லாம் நடிகர்கள் தான் தங்கள் படத்திற்காக மெனக்கெடுவார்கள். ஆனால் தற்போது அவர்களுக்கு இணையாக நடிகைகளும் உடல் எடையை அதிகரிக்க துவங்கி விட்டனர்.
தங்களின் கேரக்டர் பேசப்பட வேண்டும் என்பதற்காக அதீத முயற்சிகளில் நடிகர், நடிகைகள் இறங்குவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அவர்களில் சமீப காலத்தில் உடல் எடையை, தங்கள் கேக்டருக்கு சரியாக பொருந்தும் அளவிற்கு அதிகரித்த கோலிவுட் நடிகர், நடிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கங்கனா ரணாவத்
கங்கனா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக கிட்டதட்ட 20 கிலோ எடையை அதிகரித்தார். நடிகையாகவும், அரசியல் தலைவராகவும் தனது தோற்றம் கச்சிதமாக பொருந்த வேண்டும் என்பதற்காக, அதற்கு ஏற்ப எடையை கூட்டி உள்ளார். இந்த அளவிற்கு உடல் எடை கூடியதை தன்னாலேயே நம்ப முடியவில்லை என கங்கனா சமீபத்தில் கூறி இருந்தார்.

அசோக் செல்வன்
ஹேண்ட்சம் நடிகரான அசோக் செல்வன், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் நடிக்கும் தீணி படத்திற்காக அதிக அளவில் உடல் எடையை கூட்டி உள்ளார். இந்த படத்தில் சமையல் கலைஞராக அசோக் செல்வன் நடித்துள்ளார். இந்த படத்திற்காக தனது எடையை 103 கிலோ வரை அவர் அதிகப்படுத்தி உள்ளார். குண்டான சமையல் கேரக்டருக்காக இப்படி இவர் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

ஆ.கே.சுரேஷ்
தயாரிப்பாளரும், நடிகருமான ஆ.கே.சுரேஷ், பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிக்க வந்தார். மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டினார். தமிழில் இந்த படத்தை பத்மகுமார் இயக்கி இருந்தார். டைரக்டர் பாலா தயாரித்திருந்தார். இந்த படத்திற்காக 73 ஆக இருந்த தனது உடல் எடையை 95 கிலோவாக உயர்த்தினார் சுரேஷ்.

அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா ஷெட்டி, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டினார். ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக இயற்கையான முறையிலேயே இவர் தனது எடையை அதிகரிக்கச் செய்தார். இந்த படத்திற்காக ஃபோட்டோஷூட் நடத்திய போது, தனது உடல் மட்டும் குண்டாகவும், கைகளும், முகமும் ஒல்லியாக இருப்பதாக நினைத்தார். இதனால் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜமான குண்டு பெண்ணாக மாறினார்.


Click it and Unblock the Notifications











