கமலா தியேட்டருக்கு ஆப்படித்த கே டிவி.. அப்படியொரு படத்தை இறக்கி ரசிகர்களை திசை திருப்பிடுச்சே!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர், ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வெளியான லால் சலாம் என முன்னணி நடிகர்கள் நடித்த அனைத்து படங்களும் இந்த ஆண்டு இதுவரை தோல்வியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக தியேட்டர் பிசினஸ் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மின்சார செலவுக்கு கூட தியேட்டரை நடத்த முடியாத சூழல் உள்ள நிலையில், ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வர வேண்டும் என்றால் மீண்டும் சூப்பர் ஹிட்டான தமிழ் படங்களை ரிலீஸ் செய்தால் மட்டுமே முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.

K Tv launching Samsaram Athu Minsaram and trolls Re Release movies in theaters

விஜய், அஜித் ஓப்பனிங் தான் செம: கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியான நிலையில், நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அந்த 2 படங்கள் மட்டுமே 500 கோடி வசூலை ஜனவரி மாதமே தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தது. அதன் பின்னர் வெளியான டாடா, போர் தொழில், மாமன்னன், மாவீரன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்கள் சிறப்பான வசூலை ஈட்டிய நிலையில், ஜெயிலர் மற்றும் லியோ கடைசியில் சிக்ஸர் அடிக்கும் தோனி மற்றும் யுவராஜ் சிங் போல இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கான ஆண்டாக மாற்றினர்.

சொதப்பிய சிவகார்த்திகேயன், தனுஷ்: அதே போன்ற வாய்ப்பு தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷுக்கு கிடைத்தது. ஆனால், இருவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அருண் மாதேஸ்வரன் இயக்கிய படங்கள் சொதப்பி வந்த நிலையில், அவருடன் கூட்டணி வைத்து கேப்டன் மில்லர் படத்தையும் கெடுத்து விட்டார். சிவகார்த்திகேயனின் அயலான் படம் பல வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆனதே போதும் என்கிற நிலையில் தான் வெளியானது.

K Tv launching Samsaram Athu Minsaram and trolls Re Release movies in theaters

ரீ ரிலீஸ் படங்கள்: ரஜினிகாந்தின் லால் சலாம், அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார், ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் கடைசியாக வெளியான ஜெயம் ரவியின் சைரன் 108 படம் வரை ரசிகர்களை சோதிக்கத் தொடங்கிய நிலையில், திடீரென தியேட்டர்கள் ஐடியா பண்ணி பழைய சூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்களை சில மாதங்கள் காப்பாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலை, வாலி, பில்லா, திருமலை, காதலுக்கு மரியாதை, 96, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களை திரையிட்டுள்ளனர்.

K Tv launching Samsaram Athu Minsaram and trolls Re Release movies in theaters

கே டிவி போட்ட ட்வீட்: கமலா சினிமாஸ் ரசிகர்களுக்காக ரீல் பெட்டியை எல்லாம் தயார் செய்து படங்களை ஓட்டி வருகிறது. அந்த தியேட்டரையே கே டிவி என ரசிகர்கள் மீம் போட்டு வந்த நிலையில், இதுதான் நம்ம டைம் என நினைத்த கே டிவி கமலா தியேட்டருக்கு ஆப்படிக்கும் வகையில், சம்சாரம் அது மின்சாரம் எனும் எவர்க்ரீன் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்து, டிக்கெட்டே வாங்காமல் கே டிவியில் பாருங்க இந்த படத்தை என விளம்பரப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது. தமிழ் சினிமா சட்டென முழித்துக் கொண்டு தயார் நிலையில் இருக்கும் படங்களை மார்ச் மாதத்தில் வெளியிட்டால் தான் தியேட்டர்கள் பிழைக்கும் இல்லையென்றால் உதயம் தியேட்டர் போல மாயமாய் மறைந்து விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X