»   »  கதிர் கஞ்சா கருப்பு....'கே3'... ரஹ்மானின் இசைப்பள்ளி மாணவர் இசையமைக்கும் லவ் த்ரில்லர்!

கதிர் கஞ்சா கருப்பு....'கே3'... ரஹ்மானின் இசைப்பள்ளி மாணவர் இசையமைக்கும் லவ் த்ரில்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கே 3.. இப்படி ஒரு தலைப்பில் புதிய படம் உருவாகிறது. காமதேனு இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆதிரா நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு பிரத்வய் சிவசங்கர் இசையமைக்கிறார். இவர் ஏ ஆர் ரஹ்மான் நடத்திவரும் கேஎம் இசைப் பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பபாடல்களை இயக்குநர் ரவிசங்கர் எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் அண்ணா துரை முதல் முறையாக இயக்கும் படம் இது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவும் அவரே.

கே 3

கே 3

படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.அண்ணாதுரை கூறியாதவது...

இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா, கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை தான் இந்த படம் அதனால் தான் இந்த படத்திற்கு கே3 என்று பெயர் வைத்துள்ளோம்.

அந்த மூன்று இளைஞர்கள் கூலிப் படையாக எப்படி மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

கூலிப்படை

கூலிப்படை

இன்று நாட்டில் கூலிப்படை வேலை செய்வது பெரும்பாலும் பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் இருகிறார்கள். அவர்கள் கூலிப் படையாக மாற காரணம் அவர்களது சூழ்நிலைதான். அதைத்தான் இதில் சொல்கிறோம்.

த்ரில்லர்

த்ரில்லர்

காதல் மற்றும் திரில்லர் படமாக உருவாகி உள்ளது கே3. படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா, சென்னை, சேலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

டப்பிங் உரிமை

டப்பிங் உரிமை

இந்த படத்தை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்கிவிட்டார் அது எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

20ம் தேதி...

20ம் தேதி...

படம் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது," என்றார் இயக்குனர்.

English summary
K3 is a new love thriller directed by cameraman Annathurai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil