கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க…
எஸ்.எம்.எஸ் என்று படத்திற்கு முன்பு பெயர் வைத்தனர். அதற்கு விரிவாக்கம் சிவா மனசுல சக்தி என்று கூறினர். இப்போது அதே போல ‘க க கா போ' என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
‘கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க' என்பதன் சுருக்கம்தான் ‘க க கா போ'என்பதாம். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?

அறிமுக நாயகர்கள்
அறிமுக நாயகன் கேசவ், சாக்ஷி அகர்வால் இணைந்து நடிக்கின்றனர் இந்த ‘க க கா போ'படத்தில்.

பவர்ஸ்டார், கருணாஸ்
படம் கருணாஸ், பவர் ஸ்டார், கானா பாலா, வடிவுக்கரசி ஆகியோரும் நடித்துள்ளனர். இது முழு நீள நகைச்சுவை படம். ஏப்ரல் மாதம் வெளியாகும்," என்கிறார் இயக்குநர் விஜய்.

வடிவேலுவின் வசனம்
நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தில் வடிவேலு அமைச்சரை தன் கருத்தை விரைவாக புரிந்து கொண்டால், ‘கருத்துக்களை கட்சிதாக கவ்விக்கொள்கிறாய் போ' என்பதை சுருக்கி கககபோ என்று கூறுவார். இது மிகவும் புகழ் பெற்ற வசனமாகும்.

அது வேற இது வேற
இந்த படத்தின் தலைப்பிற்கு வடிவேலு வசனத்தின் சம்பந்தம் இல்லையாம். ‘கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்கப் போகிறார்கள்' என்பது தான் ‘க க க போ' படத்தின் விரிவாக்கம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நவைச்சுவை பட்டாளங்கள்
மலேசிய தொழிலதிபரின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் புதுமுகங்களுடன் இப்படத்தில் மதன் பாபு, பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், மயில் சாமி, கருணாஸ்,சிங்கம் புலி,சுப்பு பஞ்சு என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடிக்கிறார்கள்.

கலர்புல் படம்
படம் பயங்கர கலர்புல்... பயங்கர காமெடி என்கிறார் சுப்பு பஞ்சு அருணாச்சலம் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு நகைச்சுவை விருந்தாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்.


Click it and Unblock the Notifications











