க/பெ ரணசிங்கம் அரியநாச்சி மாதிரி இங்க நிறைய பேர் வாழறாங்க.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி!

By

சென்னை: க/பெ ரணசிங்கம் என் மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

Recommended Video

க.பெ/ரணசிங்கம் - திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், க/பெ.ரணசிங்கம்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

இதில் ரங்கராஜ் பாண்டே, ச அருண்ராஜா காமராஜ், பவானி ஶ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ஒடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

உணர்வுபூர்வமாக

உணர்வுபூர்வமாக

இந்நிலையில், மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: 'க/பெ ரணசிங்கம்' படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்தளவுக்கு கதையை ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார் இயக்குநர் விருமாண்டி.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

வசனங்களை கத்திமுனை போன்று கூர்மையாக எழுதியிருந்தார் சண்முகம். ஒரு கதையே படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்பார்கள். இவர்கள் இருவரும் தான், தற்போது இந்தப் படம் அடைந்திருக்கும் வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்தக் கதையை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர் ராஜேஷ், என்னுடன் நடித்த விஜய் சேதுபதி மற்றும் சக நடிகர்கள் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி.

முக்கியமான படம்

முக்கியமான படம்

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், இசையமைப்பாளர் ஜிப்ரான் என உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எனது நன்றி. எனது திரையுலக வாழ்க்கையில் 'க/பெ ரணசிங்கம்' முக்கியமான படம். கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகி கொண்டாடப்பட்டு இருக்கும்.

திரையரங்கில்

திரையரங்கில்

இப்போது ஜீ ப்ளக்ஸ் டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் படம் பார்க்கும் போதே இந்தளவுக்கு பாராட்டு மழை என்றால், திரையரங்கில் வெளியாகி இருந்தால் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும்போதே மகிழ்கிறேன். தொடர்ச்சியாக நல்ல படங்களில் எனது பயணம் தொடரும்.

அரியநாச்சி கேரக்டர்

அரியநாச்சி கேரக்டர்

இந்த அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், அப்படியே பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கிறது. கண்டிப்பாக இந்த அரியநாச்சியைப் போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வணங்கி, இந்தப் படத்தின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X