சென்னையை மிரட்டும் பேனர்கள்.. தியேட்டர் ரிலீஸ் போன்றே களைக்கட்டும் க/பெ ரணசிங்கம் புரமோஷன்ஸ்!

சென்னை: கபெ ரணசிங்கம் இன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தை புரமோட் செய்யும் வகையில் சென்னை முழுவதும் தியேட்டர் ரிலீஸ் போன்றே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

விஜய் சேதுபதி OK சொன்னார் அழுதுட்டேன் | CLOSE CALL WITH DIRECTOR VIRUMANDI | FILMIBEAT TAMIL

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இந்தப் படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. கபெ ரணசிங்கம் படம் தியேட்டர் ஸ்டைலில் காட்சிக்குக் கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியாகும் முதல் தமிழ் படமாக அமைந்துள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 இந்திய மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'க/பெ ரணசிங்கம்' வெளியாகவுள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

அதோடு பத்துக்கும் மேற்பட்ட இன்டெர்நேஷனல் மொழிகளில் சப் டைட்டிலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 150 நாடுகளில் ஒரே சமயத்தில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் க பெ ரணசிங்கம் படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று படம் ரிலீஸ் ஆகிறது.

பிரமாண்ட பேனர்கள்

பிரமாண்ட பேனர்கள்

க பெ ரணசிங்கம் திரைப்படத்தை ஒருமுறை பார்ப்பதற்கான கட்டணம் 199 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு புரமோஷன் செய்யும் வகையில் சென்னை முழுக்க பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையின் பல முக்கிய இடங்களிலும் தியேட்டர் வாசல்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதல் முறை

முதல் முறை

தியேட்டரில் ரிலீஸ் செய்வது போன்றே படத்திற்கான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் படத்திற்கு இப்படி புரமோட் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X