ரிலீசான 2 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் லீக்கான க/பெ. ரணசிங்கம்.. அப்செட்டில் தயாரிப்பாளர்கள்

சென்னை: விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ. ரணசிங்கம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆகி உள்ளது.

தியேட்டரில் படம் வெளியானாலே தியேட்டர் பிரின்ட்டுடன் முதல் நாளே அந்த படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி விடும்.

ஒடிடியில் நேரடியாக வெளியாகும் போது சொல்ல வேண்டுமா என்ன?

முதல் ஷோ முடிந்தவுடன்

முதல் ஷோ முடிந்தவுடன்

ஒடிடியில் படங்கள் ஹெச்.டி. தரத்தில் வெளியாவதால், முதல் ஷோ முடிந்த உடனே தமிழ் ராக்கர்ஸில் அதே தரத்தில் படத்தை லீக் செய்து விடுகின்றனர். விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் இன்று மதியம் 12 மணிக்கு வெளியான நிலையில், 2 மணியளவிலேயே தமிழ் ராக்கர்ஸில் திருட்டுத்தனமாக கசிந்து விட்டது.

200 ரூபாய் கொடுத்து

200 ரூபாய் கொடுத்து

இதில் கொடுமை என்னவென்றால், ஜி பிளெக்ஸில் 199 டிக்கெட் விலையில் வெளியாகி உள்ள இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸில் திருட்டுத் தனமாக பார்த்து விட்டு, படத்தில் அது சரியில்லை இது சரியில்லை என இந்நேரம் ட்விட்டர் விமர்சனங்களும், யூடியூப் விமர்சனங்களும் அனல் பறக்க விவாதிப்பது தான்.

மற்ற படங்களும்

மற்ற படங்களும்

இந்தியில் வெளியான காலி பீலி, அனுஷ்கா மாதவனின் சைலன்ஸ் மற்றும் விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் உள்ளிட்ட எந்தவொரு படமும் இந்த பைரசி வேட்டையில் இருந்து தப்பவே இல்லை. சைலன்ஸ் படம் நேற்று இரவு 10 மணிக்கு வெளியான நிலையில், 12 மணிக்கே தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி விட்டது. அதை பார்த்து விட்டு, நைட்டெல்லாம் தூக்கம் போச்சு என ட்விட்டரில் காலையில் பல பேர் புலம்பி வருவது வேடிக்கையாக இருந்தாலும், தயாரிப்பாளர்களுக்கு இது பெரிய தலைவலியை உண்டு செய்து விடும்.

சிக்கல் யாருக்கு

சிக்கல் யாருக்கு

தியேட்டரில் படம் ரிலீசாகும் போது திருட்டுத் தனமாக பைரஸி தளங்களில் படங்கள் கசிந்தால் தயாரிப்பாளர்களை பாதிக்கும் என்று சொல்வார்கள். ஆனால், தற்போது ஒடிடி தளங்களுக்கு ஒரு நல்ல தொகைக்கு படத்தை விற்று விட்ட பின்னர் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? அல்லது ஒடிடி தளத்திற்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது. சினிமாவின் பிசினஸ் டீலிங் என்பது சிதம்பர ரகசியம் போன்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X