தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும்.. விஜய் சேதுபதி படத்தை பாராட்டும் ஜிப்ரான்!
சென்னை: விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும க/பெ ரணசிங்கம் படத்தை பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டியிருக்கிறார்.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதுதான் என்ற கட்டுப்பாடில்லாமல் எல்லா விதமான கேரக்டர்களையும் அசத்தலாக செய்து வரும் நடிகர் விஜய் சேதுபதி.
அவரைப் போலவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் அசாத்திய நடிப்பு திறமையை கொண்டவர். இளம் வயது நடிகையாக இருந்த போதும் திருமணமான பெண், தங்கை, தாய், ஹீரோயின் என அனைத்து கதாப்பாத்திரங்களிலும் கலக்கி வருகிறார்.

கேரக்டருக்கு முக்கியத்துவம்
இருவருமே கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இருவரும் இணைந்து பண்ணையாரும் பத்மினியும், இடம் பொருள் ஏவல், ரம்மி, தர்மதுரை, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

விருமாண்டி இயக்கம்
இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் க/பெ ரணசிங்கம். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விருமாண்டி இப்படத்தை இயக்கியிருக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜிப்ரான் பாராட்டு
இப்படத்தின் சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் உருவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் இப்படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் மனதார பாராட்டியுள்ளார்.

சிறப்பான நடிப்பு
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், க/பெ ரணசிங்கம் படத்தின் பேக்கிரவுண்ட் மியூஸிக் பணிக்காக அப்படத்தை பார்த்தேன். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கும். இதில் நானும் ஒரு பார்ட்டாக இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி சிறப்பான பர்ஃபாமர்ன்ஸ் என பதிவிட்டுள்ளார்.

தேங்க் யூ சோ மச்
இதனை பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வாவ்.. தேங்யூ சோ மச் என பதில் கூறியிருக்கிறார். விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், திட்டம் இரண்டு என்ற படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











