அதிரடி திரைப்படத்தின் ஒரு வருடக் கொண்டாட்டம்... போஸ்டர் வெளியிட்ட விஜய் சேதுபதி
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான படம் க/பெ ரணசிங்கம்
கடந்த அக்டோபர் 2ம் தேதி ஓடிடியில் இந்தப் படம் வெளியானது.
இந்நிலையில் படத்தின் ஒரு ஆண்டுக் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

க/பெ ரணசிங்கம் படம்
கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ஓடிடியில் வெளியான படம் க/பெ ரணசிங்கம். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது. பெ. விருமாண்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பாராட்டுக்குள்ளானது.

அரசியல், ஜனரஞ்சக படம்
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் அரசியல் மற்றும் ஜனரஞ்சக பின்னணியில் இ,ந்தப் படம் உருவாகியிருந்தது. வெளிநாட்டில் உயிரிழந்த தன்னுடைய கணவனின் உடலை மீட்டு நாட்டுக்கு கெண்டுவரப் போராடும் அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்திருந்தார்.

போராடும் ஐஸ்வர்யா ராஜேஷ்
முன்னதாக மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் விஜய் சேதுபதி ஈடுபட்டதால் அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட, அதை எதிர்கொண்டு போராடும் பெண்ணாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரது அலைக்கழிப்பிற்கும் உள்ளாகிறார்.

ஒரு வருடக் கொண்டாட்டம்
விமர்சன ரீதியாக இந்தப் படம் மிகுந்த வெற்றிப்படைப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி ஒரு வருடக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் இன்றைய தினம் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டிய போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











