For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசு கொடுத்தா தான் க/பெ. ரணசிங்கத்த பார்க்க முடியும்? விஜய்சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!

    |

    சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

    இந்நிலையில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள க/பெ. ரணசிங்கம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

    ஜி ப்ளெக்ஸ் எனும் புதிய ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள அந்த படத்தை பார்க்க காசு கட்ட வேண்டுமாம்.

     மகள் ரிதி-யின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்தார்.. ரியோ ராஜ் ! மகள் ரிதி-யின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்தார்.. ரியோ ராஜ் !

    ஏகப்பட்ட ஒடிடி தளங்கள்

    ஏகப்பட்ட ஒடிடி தளங்கள்

    அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜி5 சினிமா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என ஏகப்பட்ட ஒடிடி தளங்கள் இந்த லாக்டவுன் காலத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன. அதே போல சின்ன சின்ன ஒடிடி தளங்களும், Pay per View என அழைக்கப்படும் காசு கொடுத்து படம் பார்க்கும் வெப்சைட்களும் பெருகி வருகின்றன.

    க/பெ. ரணசிங்கம்

    க/பெ. ரணசிங்கம்

    இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் திரைப்படம், தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருக்கப் போவதில்லை. விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜி ப்ளெக்ஸ்

    ஜி ப்ளெக்ஸ்

    ஏற்கனவே ஜி 5 சினிமா எனும் ஒடிடி தளம் ஜி நிறுவனம் சார்பில் உள்ள நிலையில், தற்போது Zee Plex எனும் புதிய ஒடிடி தளமும் சமீபத்தில் தொடங்கப்பட்டு வைரலாகி வருகிறது. காசு கொடுத்து படம் பார்க்கும் விதமாக அந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், தான் விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    ஃபர்ஸ்ட் சிங்கிள்

    ஃபர்ஸ்ட் சிங்கிள்

    நேற்று, க/பெ. ரணசிங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான "அழகிய சிறுக்கி" என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடல், அடுத்த கூடை மேல கூட வச்சி, ஆண்டிப்பட்டி அரசம்பட்டி பாடல்கள் போல ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெயிட்டிங் லிஸ்டில்

    வெயிட்டிங் லிஸ்டில்

    விஜய்சேதுபதி நடிப்பில் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், மாஸ்டர், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதில், எத்தனை படங்கள் தியேட்டரில் வெளியாகும், எத்தனை படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகும் என்பது கூடிய விரைவில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

    English summary
    Vijay Sethupathi’s next Ka Pae Ranasingam will ready to release in OTT as pay per view method. It will release on new OTT portal Zee Plex, Official announcement will arrive soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X