பசியெடுத்த பறவைகளா.. கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்கு வைரமுத்துவின் கண்ணீர் காணிக்கை!

சென்னை: விஜய்சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தின் மூன்றாவது பாடலான "பறவைகளா" பாடல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஸ்ரீ நடிப்பில் க/பெ. ரணசிங்கம் படம் உருவாகி உள்ளது.

வரும் அக்டோபர் 2ம் தேதி ஜி பிளெக்ஸ் ஒடிடி தளத்தில் Pay Per View முறையில் படம் ரிலீசாகிறது.

செதுக்கி இருக்கிறார்

செதுக்கி இருக்கிறார்

ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தின் அத்தனை பாடல்களையும் பாடலாசிரியர் வைரமுத்து எழுதி உள்ளார். நல்ல தமிழில், ஆழமான அழுத்தமான வரிகளுடன் இவர் செதுக்கி உள்ள ஒவ்வொரு பாடலும் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக

முதல் பாடல் காதல் பாடலாகவும், இரண்டாவது பாடலான புன்னகையே பாடல் ஒரு பெண் கணவனை மீட்க எப்படி புயலாய் மாறுகிறாள் என்பதையும் எடுத்துரைத்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள "பறவைகளா" பாடல் வெளிநாடுகளில் வேலைக்கு சென்று அங்கே சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் தேசிய கீதமாக வடித்துள்ளார் வைரமுத்து.

கண்ணீர் காணிக்கை

கண்ணீர் காணிக்கை

"பறவைகளா பறவைகளா"கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்குக் காணிக்கை இந்தக் கண்ணீர்ப் பாடல் என தற்போது பாடலை வெளியிட்டு பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார். அவரது ரசிகர்கள் பாடலின் ஆழம் குறித்தும் அந்த வலியை உணரும் தொழிலாளர்களின் நிலை குறித்தும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

காசு கொடுத்து

காசு கொடுத்து

மாத சந்தா, வருட சந்தா கட்டும் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் வெளியாகாமல், தியேட்டரை போலவே, பார்க்கும் ஒவ்வொரு முறையும் காசு கொடுத்து பார்க்கும் Pay Per View முறையில் இந்த படம் ஜி பிளெக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு 199 ரூபாய் என ஆன்லைன் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X