twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 மொழிகளில் ரிலீசாகும் க/பெ ரணசிங்கம்.. மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு இயக்குனர் நன்றி !

    |

    சென்னை : க/பெ ரணசிங்கம் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும், அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் இயக்குனர் விரும்பாண்டி, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    Recommended Video

    CLIMAX ல கண்டிப்பா கண்ணீர் வரும் | CLOSE CALL WITH CINEMATOGRAPHER EKAMBARAM | FILMIBEAT TAMIL

    இயக்குநர் செல்வாவிடம் துணை, இணை இயக்குநராக பல திரைப்படங்களில் பணியாற்றி தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் KJR studios கோட்டப்பாடி J.ராஜேஷ் தயாரிப்பில் க/பெ ரணசிங்கம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கி நல்ல பெயரையும் வாங்கி உள்ளார்

    இத்திரைப்படம் கடந்த 2 ஆம் தேதியன்று டி.டி.எச் தளத்தில் ZEE PLEX லும் ஓடிடி தளத்தில் ஜீ5 லும் வெளியாகி உலகமெங்கும் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று (09-10-2020 ) வெளியாகவுள்ளது.

    உங்களால குழந்தைய சரியா வளர்க்க முடியலன்னா.. அப்புறம் எதுக்கு பெத்துக்குறீங்க.. கொதித்த ரசிகர்கள்!உங்களால குழந்தைய சரியா வளர்க்க முடியலன்னா.. அப்புறம் எதுக்கு பெத்துக்குறீங்க.. கொதித்த ரசிகர்கள்!

    அனைவருக்கும் நன்றி

    அனைவருக்கும் நன்றி

    தமிழில் மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்த அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இயக்குனர் விருமாண்டி கூறியுள்ளார்.

    நெகிழ்ச்சி

    நெகிழ்ச்சி

    இந்த நெகிழ்வான தருணத்தில் தனது தந்தை கலைமாமணி பெரியகருப்பத்தேவர், தாயார் அன்னமயில், வாழ்வில் அத்தனை சோதனையான காலகட்டதிலும் தாங்கிப்பிடித்த மனைவி செல்விக்கும், உடன் பிறந்த சகோதரர்கள் கார்த்திக் ,பால்பாண்டி , கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று மிகவும் எமோஷனலாக கூறி உள்ளார் .

    நீளும் பட்டியல்

    நீளும் பட்டியல்

    க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் தன்னுடன் பயணித்த பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் வசனகர்த்தா நண்பன் சண்முகம் முத்துசாமி,இசையமைப்பாளர் ஜிப்ரான்,பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து ஒளிப்பதிவாளர் NK.ஏகாம்பரம்,சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்,படத்தொகுப்பு செய்த சிவாநந்தீஸ்வரன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா,நடன இயக்குநர் ராஜூ சுந்தரம்மற்றும் நண்பன் S.K.வெற்றிச் செல்வன், இயக்குனர் தம்பி தாஸ் ராமசாமி மற்றும் இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கு நன்றி என்று பட்டியலிட்டு சொல்லி உள்ளார் விருமாண்டி ரசிகர்கள் சாத்தியப்படுத்திய வெற்றி சந்தோஷத்தை மட்டுமல்ல அடுத்த படத்திற்கான பொறுப்பையும் தந்துள்ளது என்றார்.

    4 மொழிகளில் ரிலீஸ்

    4 மொழிகளில் ரிலீஸ்

    மேலும், இனிவரும் தனது படைப்புகளுக்கும் ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டஅவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரிலீஸ் ஆகும் இந்த தருணத்தில் படத்திற்கு ஆதரவு தருமாறு பெ.விருமாண்டி ரசிகர்களை கேட்டு கொண்டு உள்ளார் .

    English summary
    Ka Pae Ranasingam will be release in 4 languages ​
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X