»   »  நண்பன் ரஜினிக்காக ஸ்பெஷலாக திரையிடப்படப்படும் இந்தி படம்

நண்பன் ரஜினிக்காக ஸ்பெஷலாக திரையிடப்படப்படும் இந்தி படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரித்திக் ரோஷன் நடித்துள்ள காபில் படத்தை ரஜினிகாந்துக்கு ஸ்பெஷலாக போட்டுக் காட்ட முடிவு செய்துள்ளார் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷன்.

பாலிவுட் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நல்ல நண்பர்கள் ஆவர். ராகேஷின் மகன் ரித்திக் ரோஷன் பார்வையற்றவராக நடித்துள்ள படம் காபில்.

'Kaabil' special screening for Rajinikanth!

அந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரஜினி படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக ராகேஷிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காபில் படத்தை ரஜினிக்காக ஸ்பெஷலாக திரையிட முடிவு செய்துள்ளார் ராகேஷ்.

இது குறித்து ராகேஷ் கூறுகையில்,

சூப்பர் ஸ்டார் ரஜினி ரித்திக்கின் படத்தை பாராட்டியது எனக்கு பெருமையாக உள்ளது. நானும் ரஜினியும் அடிக்கடி பேசிக் கொள்ளாவிட்டாலும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.

க்ரிஷ் படம் ரிலீஸான போது அவருடன் கடைசியாக பேசியது. என்னையும், ரித்திக்கையும் பாராட்டினார் என்றார்.

English summary
Bollywood producer Rakesh Roshan has planned for a special show of Kaabil for Super Star Rajinikanth.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil