காதல் மன்னன் திலோத்தமாவின் ரியல் காதல் மன்னன.. வாவ் சூப்பரா இருக்காரே!

சென்னை: அஜித் ஹீரோவாக சிவா என்ற கதாபாத்திரத்திலும், அறிமுக நாயகி மானு திலோத்தம்மாவாக நடித்த திரைப்படம் தான் காதல் மன்னன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்காமல் தொடர்ந்தார். இந்த படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன போதும், நடிகை மானுவை 90 ரசிகர்கள் மறக்கவில்லை. தற்போது இவர் தனது கணவருடன் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

1998ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கிய திரைப்படம் காதல் மன்னன் இந்த படத்தில் அஜித், மானு, எம். எஸ். விஸ்வநாதன்,விவேக், கரண், கிரிஷ் கர்னாட், கனல் கண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில், கிரிஷ் கர்னாட்டின் முதல் மகள் கண்டிப்பாக வளர்த்து, தன்னை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால், இளைய மகள் திலோத்தம்மாவை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்த்து, பணக்கார இளைஞர் ஒருவருடன் நிச்சயதார்த்தமும் நடந்து விடுகிறது.

Kaadhal Mannan movie Actress Maanu Husband video trending on social media

சூப்பர் படம்: அந்த நேரத்தில் தான் காதல் திருமணம் செய்து கொண்ட திலோத்தம்மாவின் அக்கா, தனது தங்கையிடம் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் போட்டோவை கொடுக்கும் படி, ஹீரோ அஜித்தை அனுப்புகிறார். அக்கா புகைப்படம் பார்த்த உடன் தன் அக்காவை டெல்லி சென்று சந்திக்க உதவுமாறு அஜித்திடம் கேட்கிறார் நாயகி. தந்தை கட்டுப்பாடுகளை சமாளித்து அக்கா மற்றும் குழந்தைகளை சந்திக்கவைத்த அஜித் மீது திலோத்திமா மனதிலும் காதல் மலர்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும்.

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன்: நடிகை மானு அந்த படத்திற்கு பின் எந்த படத்திலும் தென்படவில்லை, பல ஆண்டுகளுக்கு பின் அவர் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன், பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது விவேக் மற்றும் இயக்குனர் சரண் இருவரும் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். ஆனால்,படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் அதன் பின் நான் நடிக்கவில்லை என்றார்.

ரியல் காதல் மன்னன்: தொடர்ந்து பேசிய மானு, திருமணத்திற்கு பிறகு எனக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்தது. அவரை நான் என் கணவராக நான் பார்த்ததே இல்லை, அவரை ஒரு நல்ல நண்பராக பார்க்கிறேன். அவர் என் பெஸ்ட்டி. இதை கேட்பதற்கு வேண்டுமானால் கொஞ்சம் ஓவராக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. நடிகை மானுவின் கணவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X