தமிழே வராத காஜல் அகர்வால் விருதுநகர் தமிழ் பேசுவாரா?
ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன் விருதுகளை குவித்த படம் குயின். இந்த படம் தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகிறது. வசனம் தமிழச்சி தங்கபாண்டியன்.
தமிழில் விருதுநகர் பெண்ணாக நடிக்கிறாராம் காஜல் அகர்வால். இந்த ரோல் பெர்ஃபார்மென்ஸ் அதிகம் தேவைப்படும் ரோல். காஜல் அந்த அளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணுவாரா என்பது சந்தேகம் தான்.

அதோடு விருதுநகர் தமிழில்தான் வசனங்கள் இருக்கப்போகின்றன. இன்னும் காஜலுக்கு சாதாரண தமிழே வாயில் நுழைய மறுக்கிறது. எனவே இது பக்கா காமெடி படமாக உருவாகும் போல தெரிகிறது என்று கமெண்ட் அடிக்கின்றனர்.
இவங்க எல்லாரோட எண்ணத்தையும் மாத்திக் காட்டறேன் என்று சபதம் எடுத்திருக்கிறாராம் காஜல்.
Comments


Click it and Unblock the Notifications