ஓவர்டார்ச்சர்.. அசிங்க அசிங்கமா மெசேஜ்.. தவியாய் தவிக்கும் பிரபலநடிகை.. டானுக்கே இப்டி ஒரு நிலைமையா?
சில மர்ம நபர்கள் தனக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்புவதுடன், தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்வதாக நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: யாரோ சில மர்ம நபர்கள் தனக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்புவதுடன், தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்வதாக நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.
கோ, கௌரவம், பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்த சாண்டியின் முதல் மனைவி தான் இந்த காஜல்.

டிவிட்டரில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை இவர் உருவாக்கி வைத்துள்ளார். டிவிட்டர் ரசிகர்கள் காஜலை அன்புடன் டான் என்று அழைப்பது தான் வழக்கம். இம்முறை ஆரம்பம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தினமும் தனது விமர்சனங்களை டிவிட்டரில் வெளியிட்டு வந்தார். அதோடு சாண்டிக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரித்தார்.
ஆனால் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிய போது திடீரென பிக் பாஸ் பார்ப்பதை நிறுத்தி விட்டதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பரபரப்பாக பிக் பாஸ் பற்றி அவர் எதுவும் பதிவிடவில்லை.
இந்நிலையில் தனக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்து டார்ச்சர் செய்து வரும் நபர் பற்றி டிவிட்டரில் புகைப்படத்துடன் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'ஏற்கனவே இவரை போலீசில் பிடித்துக் கொடுத்தேன். ஆனால் தன் பணபலத்தை பயன்படுத்தி வெளியில் வந்து விட்டார். தற்போது மீண்டும் எனக்கு டார்ச்சர் தருகிறார்.
வாட்ஸ் அப்பில் மிகவும் அசிங்க அசிங்கமாக மெசேஜ் அனுப்புகிறான். வேறு வேறு நம்பர்களில் இருந்து கால் செய்கிறான். பிளாக் செய்தே டயர்ட் ஆகி விட்டேன். இவரை சைபர் கிரைமில் பிடித்து உள்ளே தள்ள ஏதும் வாய்ப்பிருக்கிறதா?' என தன் ரசிகர்களிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











