பிக்பாஸ் வீட்டின் உண்மையான பச்சோந்தி யார்? நடிகை காஜல் பரபர!
Recommended Video
சென்னை பிக்பாஸ் வீட்டின் உண்மையான பச்சோந்தி யார் என நடிகை காஜல் தனது டிவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற நடிகையும் டிவி தொகுப்பாளருமான காஜல் பசுபதி அவ்வப்போது பிக்பாஸ் குறித்து கருத்து கூறி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் வனிதா நடந்து கொண்ட விதம் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார் காஜல். மேலும் தனது முன்னாள் கணவரான சாண்டி குறித்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும் தொடர்ந்து டிவிட்டி வருகிறார் காஜல்.

முதல் வாரத்தில்
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள அபிராமி குறித்து காஜல் மீம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது முதல் வாரத்தில் அபிராமி, பெண்களில் ஷெரின் மற்றும் சாக்ஷியுடன் உள்ளார். ஆண் என பார்க்கும் போது கவினுடன் உள்ளார்.

தர்ஷனுடன் அபிராமி
இரண்டாவது வாரத்தில் பெண் என பார்க்கும் போது வனிதாவுடன் உள்ளார் அபிராமி. ஆண் என பார்க்கும் போது தர்ஷனுடன் உள்ளார்.

உண்மையான பச்சோந்தி
மூன்றாவது வாரத்தில் மதுமிதாவுடன் உள்ளார் அபிராமி. ஆண்களில் முகெனுடன் உள்ளார். இப்படியான ஒரு போட்டோவை போட்டு பிக்பாஸ் வீட்டின் உண்மையான பச்சோந்தி அபிராமிதான் என கூறப்பட்டுள்ளது அந்த மீமில்.
கவினுடன் காதல்
இந்த மீமை தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள காஜல், தான் எதுவும் பேசவில்லை என்பதை போல் வாயை மூடியுள்ள ஈமோஜியை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்தில் கவினுடன் காதல் கொண்டார் அபிராமி.

முகெனிடம் ஐ லவ் யூ
கவினை சாக்ஷி தட்டிப்பறிக்க முகெனுடன் நெருக்கமானார் அபிராமி. தற்போது முகெனுடன் மிக நெருக்கமாகவுள்ள அபிராமி நேற்று அவருடன் ஐ லவ் யூ என்றார். இது நட்புக்கான ஐலவ்யூவா அல்லது காதலுக்கான ஐலவ்யூவா என்பது இதுவரை தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











