நல்லவங்களாவும் உண்மையாகவும் இருந்தா ஜெயிக்க முடியாது.. அசீம் வெற்றியை விளாசிய காஜல் பசுபதி!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அப்யூசர் அசீம் என ட்ரோல் செய்யப்பட்ட அசீம் டைட்டிலை வென்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நடிகை காஜல் பசுபதி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் அல்லது ஷிவினுக்குத் தான் டைட்டில் கிடைக்க வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால், கடைசியில் அசீம் டைட்டிலை வென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், பிஆர் டீம் செய்த மோசடி தான் இப்படியொரு வெற்றியை அசீம் பெற்றுள்ளார் என விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.

 டைட்டிலை வென்ற அசீம்

டைட்டிலை வென்ற அசீம்


பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை அசீம் வென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பலரும் ஷாக் ஆகி விட்டனர். விக்ரமன் அல்லது ஷிவினுக்கு தான் டைட்டில் கொடுப்பார்கள் என நினைத்த ரசிகர்கள் அசீமுக்கு போய் எப்படி டைட்டில் கொடுத்தாங்க என ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

 விக்ரமன் ரசிகர்கள் ஏமாற்றம்

விக்ரமன் ரசிகர்கள் ஏமாற்றம்

அறம் வெல்லும் என விக்ரமன் ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், கடைசி நேரத்தில் பெரிய கட்சியின் தலைவரே நேரடி சப்போர்ட் கொடுத்து இருந்தார். ஆனாலும், விக்ரமனுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்காமல் தோல்வியை தழுவி விட்டார். ரன்னர் அப் ஆனாலும் எந்தவொரு பரிசுத் தொகையும் கிடைக்காது என்பதால் விக்ரமன் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 ஷிவின் ஃபேன்ஸ் அப்செட்

ஷிவின் ஃபேன்ஸ் அப்செட்


அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளரான ஷிவின் இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி கடைசி வரை தாக்கு பிடித்த நிலையில், அவருக்கு டைட்டில் கிடைத்தால் அது ஒரு வரலாறாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவான வாக்குகளையே ஷிவின் பெற்றதால் அவர் டைட்டிலை வெல்ல முடியாத நிலையில், ஷிவின் ரசிகர்களும் அப்செட் ஆகி விட்டனர்.

 கடுப்பான காஜல் பசுபதி

கடுப்பான காஜல் பசுபதி

"எங்கேயும் நல்லவங்களா உண்மையா இருந்தா ஜெயிக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் சொசைட்டி" என நடிகை காஜல் பசுபதி அசீமின் வெற்றி ஏமாற்று வேலை என ட்வீட் போட்டு விளாசி உள்ளார். விக்ரமன் ஆர்மியினரும் அசீம் வெற்றி பெற்றது பிஆர் டீம் பண்ண பரப்புரை காரணமாகத்தான் என தோல்வியடைந்த விரக்தியில் புலம்பி வருகின்றனர்.

 அசீம் ரசிகர்கள் கொண்டாட்டம்

அசீம் ரசிகர்கள் கொண்டாட்டம்

யார் என்ன சொன்னால் என்ன தலைவன் அசீம் தான் மக்கள் நாயகன். முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை பார்க்க வைத்ததும் பரபரப்பாக்கியதும் அசீம் தான் அவர் தான் டைட்டில் வின் பண்ணுவார் என நினைத்ததை போலவே மனுஷன் வென்று கெத்துக் காட்டி விட்டார் என அசீம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X