இதுல என்ன விளையாட்டு... - ஆண்கள் டாய்லெட்டில் செல்ஃபி எடுத்த காஜல்!
Recommended Video

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலமாகப் பலரும் இதுவரை பிரபலமாகியுள்ளனர். இந்தி, தெலுங்கு பிக்பாஸ்களில் கலந்துகொண்டு அதனால் படங்களில் நிறைய வாய்ப்பு கிடைத்தவர்கள் ஏராளம்.
அந்த வகையில் படங்களிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்துகொண்டார்.
இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிச்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
ஜென்ட்ஸ் டாய்லெட்டில் :
தியேட்டர் ஒன்றின் ஆண்கள் டாய்லெட்டில் செல்ஃபி எடுத்துள்ளார். 'நான் ஏன் இன்னிக்கு இங்கே இருக்கேன்?' கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...' என ரசிகர்களை யூகிக்கச் சொல்லிக் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
நமீதா கூடவா :
பிக்பாஸ் வீட்டுக்குள் டாய்லட் க்ளீன் செய்வதைப் பற்றி நமீதா க்ளாஸ் எடுத்ததால், இங்கே நமீதா மேம் கூட இருக்கீங்களா என ஒருவர் கேட்டிருக்கிறார்.
ஷூட்டிங்கா :
'ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருங்க. நீங்க எது செஞ்சாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.' என ஒருவர் கூறியிருக்கிறார். பலரும் காஜல் ஷூட்டிங்கில் இருப்பதாகவே ரிப்ளை செய்திருக்கிறார்கள்.
வாயைக் கெளறாதீங்க... :
'யூ ஆர் புட்டிங் எ வேர்ட்ஸ் இன் மை மவுத்' என ரிப்ளை செய்திருக்கிறார் ஒருவர்.
இதுக்குத்தானே :
நீங்க இப்படி போட்டோ போட்டு கேள்வி கேக்குறது, நாங்க மண்டையைப் பிச்சிக்கிட்டு யோசிக்கத்தானே...
இது வேறயா :
அக்ஷய்குமார் நடிச்ச டாய்லெட் படத்தோட ரீமேக்ல நடிக்கப் போறீங்க போல. அதோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கீங்களா எனக் கேட்டுள்ளார் ஒருவர்.
பிரியங்கா சோப்ரா :
இந்தப் படத்தில் ரசிகர் ஒருவர் காஜல் பசுபதி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா போல இருப்பதாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











