ரஜினி பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை இசை வெளியீடு

By Shankar

சிவகார்த்திகேயன் நடித்துள்ள காக்கிச் சட்டை படத்தின் இசையை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என்றும், படத்தை வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியிட முயற்சிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் எதிர்நீச்சல். இதனை இயக்கிய துரை செந்தில் குமார் மீண்டும் சிவகார்த்தியுடன் இணைந்துள்ள படம்தான் காக்கிச் சட்டை. அனிருத் இசையமைத்துள்ளார்.

Kaakki Sattai audio on Rajini bithday

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் படத்தின் இசையை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் மிகத் தீவிர ரஜினி ரசிகர். படங்களிலும் அதுபோலவே காட்சிகளை அமைக்கச் சொல்வது வழக்கம்.

இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் மிக விசேஷமாக அமைந்துள்ளது. அன்றுதான் டிசம்பர் லிங்கா படம் வெளியாகிறது. ரஜினியைக் கவுரவிக்கும் விதமாக காக்கிச் சட்டையின் இசை வெளீட்டையும் அன்றே வைக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.

அதன்படி டிசம்பர் 12-ம் தேதி காக்கிச் சட்டை இசை வெளியாகிறது. படத்தை கிறிஸ்துமஸ் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X