காலா ஆல்பம் டிரெய்லர் நாளை ரிலீஸ்... ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் சர்ப்ரைஸ்
ரஜினியின் காலா பட ஆல்பம் முன்னோட்டம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரஜினி நடித்துள்ள காலா படத்தின் பாடல் ஆம்பம் முன்னோட்டம் நாளை வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.
கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடிக்கும் படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கும் இசையத்துள்ளார்.

ஏற்கனவே வெளியாகிய 'செம்ம வெயிட்' பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா மே 9ம் தேதி, சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், பாடல் ஆல்பம் முன்னோட்டம் நாளை(மே 07 திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும் என வுண்டர்பார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "காலா ஆல்பம் முன்னோட்டத்துடன் நாளை மதியம் 3 மணிக்கு நாங்கள் வருகிறோம். எங்களுடன் இணைந்திருங்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.
மே 9ம் தேதி இசை வெளியீட்டு விழா, ஜூன் 7 தேதி படம் வெளியீடு என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், ஆல்பம் முன்னோட்ட அறிவிப்பு அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











