மாஸ்... அதிரடி... வேற லெவல்... - இணையத்தைக் கலக்கும் காலா டீசர் #KaalaTeaser

By Shankar

Recommended Video

ரஜினியின் அரசியலா காலா டீசர்?- வீடியோ

இணையதளத்தில் இன்றைய சென்சேஷன் ரஜினிகாந்தின் காலா படத்தின் அதிரடி டீசர்தான். வெளியான சிலமணி நேரங்களில் ஒன்றரை மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்றுள்ள காலா டீசர் பற்றித்தான் இணையவெளியெங்கும் பேச்சாக உள்ளது.

பொறி பறக்குது

பொறி பறக்குது

"கபாலியில் ரஜினி களைத்துப் போய் காணப்பட்டார். காரணம் அந்த பாத்திரம் அப்படி. ஆனால் காலாவில் நெருப்பு மாதிரி பொறி பறக்க வைக்கிறார். வசனங்களும், அதை ரஜினி உச்சரிக்கும் விதமும் மின்சாரம் பாய்ச்சியது போல உள்ளது," என பலரும் பாராட்டி வருகின்றனர்.

மாஸ்

மாஸ்

"மாஸ் என்றால் என்னவென்று காலா டீசர் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். பட்டையைக் கிளப்புகிறது... நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட பல மடங்கு பிரமாதப்படுத்திவிட்டார் இயக்குநர் ரஞ்சித். தலைவர் ஏன் ரஞ்சித்துடன் இரண்டாம் முறை கூட்டணி போட்டார் எனப் புரிகிறது," என்று பரவசப்பட்டுள்ளனர் ரஜினி வாட்ஸ்ஆப் குழுவினர்.

வேற லெவல்

வேற லெவல்

"நிச்சயம் இந்த டீசர் வேற லெவல்.. கபாலி டீசர் சாதனையை இன்றே முறியடித்தாலும் சந்தேகமில்லை. அப்படி ஒரு பவர்புல் டீசர்... இன்னும் தெலுங்கு, இந்திய வர்ஷன்கள் வந்தால் நாடு முழுக்க அதிர்வலை கிளம்பும்...," - இது இன்னுமொரு ரசிகரின் கமெண்ட்.

கமெண்டுகள்

கமெண்டுகள்

காலா டீசருக்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்டுகள் இப்படி குவிந்து வருகின்றன. பெரும்பாலும் பாசிடிவ்வாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டிங்

இந்திய அளவில் காலா டீசர்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது #KaalaTeaser, இன்று காலையிலிருந்து. சென்னையைப் பொறுத்தவரை கடந்த மூன்று நாட்களாகவே ரஜினி, காலா போன்றவைதான் ட்ரெண்டிங்கில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X