'காலா' நாய்க்கு செம மவுசு... ரஜினிக்கு பிடித்த மணிக்கு 2 கோடி மார்க்கெட்!

By Vignesh Selvaraj

Recommended Video

'காலா' படத்தில் நடித்திருக்கும் நாய்க்கு செம மவுசு! 2 கோடி மார்க்கெட்!- வீடியோ

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் 'காலா'.

மும்பை டானாக வரும் ரஜினிகாந்த்தின் கூடவே ஒரு நாய் வலம் வருகிறது. இது தெருவில் வளரும் நாட்டு நாய் வகையைச்சேர்ந்தது தான்.

இந்த நாயைப் பற்றிய தகவல்களை அதன் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

காலா நாய்

காலா நாய்

'காலா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே கவனிக்கப்பட்ட முக்கியமான விஷயம். அதில் ரஜினிக்கு அருகே இருக்கும் நாய். அந்த நாயும் 'காலா' படத்தில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறது.

மணி

மணி

இந்த நாய்க்கு மணி என பெயர் வைத்திருக்கிறார்களாம். இதை சென்னையின் புறநகர்ப் பகுதித் தெருவில் கண்டெடுத்து இந்த படத்தில் நடிக்க ட்ரெய்னிங் கொடுத்துள்ளார் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர்.

ஆடிஷனில் வென்ற நாய்

ஆடிஷனில் வென்ற நாய்

ரஞ்சித், இப்படத்திற்காக நிறைய நாய்களை அழைத்து வரச் சொல்லி எதிலும் திருப்தி ஆகவில்லையாம். கிட்டத்தட்ட 30 நாய்கள் ஆடிஷனில் அவுட் ஆகியிருக்கின்றன. கடைசியாக இந்த நாய் தான் சூப்பர்ஸ்டாருடன் நடிக்க ஓகே ஆகியிருக்கிறது.

ரஜினிக்கு பிடித்த நாய்

ரஜினிக்கு பிடித்த நாய்

ரஜினியிடம் இந்த நாயைக் காட்டியதும், இவன் பண்ணிடுவானா எனக் கேட்டாராம். பண்ணிடுவான் எனச் சொன்னதும் ஓகே சொல்லிட்டாராம். ரஜினிக்கு இந்த நாயை மிகவும் பிடிக்கும் என பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.

செம மார்க்கெட்

செம மார்க்கெட்

ரஜினியுடன் 'காலா' படத்தில் நடித்ததையடுத்து இந்த நாயை ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்க வெளிநாட்டில் சிலர் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் இதை வளர்க்கும் சைமன் தன்னுடைய பிள்ளை போல் வளர்ப்பதால் கொடுக்க மனமில்லை என்று மறுத்துள்ளாராம்.

அதற்குள் வேறு வாய்ப்புகள்

அதற்குள் வேறு வாய்ப்புகள்

'காலா' படத்தில் நடித்து அந்தப் படம் வெளியாவதற்குள் 'மெஹந்தி' சீரியல் உட்பட நான்கு படங்களில் நடித்திருக்கிறதாம் இந்த நாய். நிறைய படங்களுக்கு வெவ்வேறு நாய்களை சப்ளை செய்பவர் விலங்குகள் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X