'காலா' ரிலீஸ் தள்ளிப்போவது உறுதி.. இந்தத் தேதியில் தான் வெளியாகுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

காலா இந்த தேதியில் தான் ரிலீஸா?- வீடியோ

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. உலகம் முழுவதுமிருக்கும் ரஜினி ரசிகர்கள் 'காலா' ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள்.

'காலா' டீசர் வெளியானது இன்னும் பரபரப்பை அதிகப்படுத்தியது. ஷங்கரின் '2.ஓ' படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாததால் 'காலா' படத்தை ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்தார் தயாரிப்பாளர் தனுஷ்.

Kaala expected to be released on june 15

ஆனால், தமிழகத்தில் சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்றதால் குறித்த தேதியில் காலா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது செவ்வாய்க்கிழமை சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டது.

ஆனாலும், 'காலா' படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை. ஏனெனில், சென்சார் சான்றிதழ் பெற்ற தேதி வரிசையில்தான் இனி படங்கள் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. இது தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

ஆகவே, 'காலா' படத்துக்கு முன்பே சென்சார் சான்றிதழ் வாங்கிக் காத்திருக்கும் படங்கள் தான் முதலில் வெளியாகும். அப்படிப் பார்த்தால் 'காலா' படம் ரிலீஸாக நிச்சயம் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

லேட்டஸ்ட் தகவல்படி, 'காலா' படத்தை ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஜூன் 15-ம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. சம்மர் கலெக்ஷனை முன்னிலைப்படுத்தி ஏப்ரலில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட படம் பள்ளிகள் திறப்பிற்குப் பிறகுதான் ரிலீஸ் ஆகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X