twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.101 கோடி கேட்டு.. காலாவிற்கு எதிராக நிஜக் ‘காலா’வின் மகன் அவதூறு வழக்கு!

    ரஜினியின் ‘காலா’ படத்திற்கு எதிராக ஜவஹர் என்பவர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    |

    Recommended Video

    காலாவிற்கு எதிராக நிஜ ‘காலா’வின் மகன் ரூ.101 கோடி கேட்டு அவதூறு வழக்கு!- வீடியோ

    சென்னை: ரஜினியின் காலா படத்திற்கு எதிராக, மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹர் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் வியாழன் ரிலீசாக இருக்கிறது. இதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காலா கதைக்களம்:

    காலா கதைக்களம்:

    காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளவர் திரவியம் நாடாரின் மகனான ஜவஹர் என்பவர் தான்.

    காரணம்:

    காரணம்:

    வழக்கிற்கான காரணம் குறித்து ஜவஹர் கூறியிருப்பதாவது, "இந்தப் படத்தின் கதை என்னுடைய அப்பா சம்மந்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற அவர் தாராவி தமிழ் மக்களுக்கு பல நல்ல விசயங்களை செய்துள்ளார். அவர்களை பொறுத்தவரை அவர் தெய்வம்.

    காலா:

    காலா:

    அவரை அங்குள்ள மக்கள் காட்பாதர் எனப் பொருள்படும் வகையில், ‘காத்வாலா சேட்' என்றே அழைப்பர். காலா படத்திலும் அது குறித்து கூறப்பட்டுள்ளது. அதோடு, என் தந்தை சர்க்கரை வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆளாக திகழ்ந்தவர். இதுவும் படத்தில் வருகிறது.

    நேர்மையானவர்:

    நேர்மையானவர்:

    ஆனால், நிஜத்திற்கு விரோதமாக படத்தில் காட்வாலா சேட் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது. என் தந்தை சட்டவிரோதமான செயல்கள் எதிலும் ஈடுபடாதவர். எனவே இப்படத்தால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

    ரூ. 101 கோடி:

    ரூ. 101 கோடி:

    எனவே, அவருக்கும் காலாவுக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு நடிகர் ரஜினி மற்றும் தனுஷ், 36 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும், விளக்கமும் அளிக்க வேண்டும். இல்லையேல் வழக்கு நீடிக்கும். படம் வெளியாக அனுமதிக்க மாட்டேன். மேலும் அவதூறுக்காக ரூ 101 கோடி தரவேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

    சர்ச்சைகளில் ரஜினி:

    சர்ச்சைகளில் ரஜினி:

    ஏற்கனவே, ரஜினியின் காவேரி பேச்சுகளால் கர்நாடகாவில் காலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு ரஜினியின் தூத்துக்குடி பயண பேட்டிகளால் அவர் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் திட்டமிட்டபடி காலா ரிலீசாகாது என்ற பேச்சு பரவலாக உள்ளது.

    எதிர்பார்ப்பு:

    எதிர்பார்ப்பு:

    இந்த சூழ்நிலையில் ஜவஹரின் அவதூறு வழக்கால் தமிழகத்திலும் காலா ரிலீசுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான விளக்கங்களை படக்குழுவினர் அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எச்சரிக்கை:

    எச்சரிக்கை:

    முன்னதாக, காலா படப்பிடிப்பின் போது ராமநாதபுரம் பகுதியைச் சார்ந்த ஹாஜி மஸ்தான் பற்றிய கதை தான் காலா என்று தகவல் வெளியானது. அப்போது அவருடைய மகன் ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ரஜினி தரப்பும் அந்தக் கதை அல்ல என்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Mumbai Thiraviyam Nadar son Jawahar nadar has issued a defamation notice to actor Rajini and his son in law Dhanush, demanding Rs. 101 crore as compensation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X