இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்
காலா கரிகாலனின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
காலா கரிகாலனின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் புதிய படத்துக்கு காலா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. காலா என்ற தலைப்புக்கு அடியில் கரிகாலன் என்ற பெயர் வருமாறு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிக்கு விருப்பமான மாமன்னன் கரிகாலனைக் குறிக்கும் விதத்திலேயே இந்தத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.
இந்தப் படம் வரும் மே 28-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்கிறார்.
இந்த நிலையில் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியாகும் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த போஸ்டர்களுக்காக காத்திருக்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications