“காலா தான் ரொம்ப புடிக்கும், சார்பட்டா பரம்பரை படத்த பாதிக்கு மேல பார்க்கல!”: ரஞ்சித் ஓப்பன் டாக்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், தற்போது 'விக்டிம்' என்ற ஆந்தாலஜி படத்தில் ஒரு கதையை இயக்கியுள்ளார்.

நேரடியாக சோனி ஓடிடியில் வெளியான 'விக்டிம்' படத்திற்கு பரவலான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியொன்றில் பேசிய பா. ரஞ்சித், அவர் இயக்கிய 'காலா' படத்தின் அனுபவங்களை பற்றி பல சுவாரஸ்யங்களைக் கூறியுள்ளார்.

ஆந்தாலஜி விக்டிம்

ஆந்தாலஜி விக்டிம்

பா. ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்பு தேவன், எம். ராஜேஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள 'விக்டிம்' திரைப்படம் ஆந்தாலஜி பின்னணியில் சோனி ஓடிடியில் வெளியாகியுள்ளது. 4 வெவ்வேறு கதைகளாக உருவாகியுள்ள இப்படத்தில், 'தம்மம்' என்ற கதையை, பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். 'கொட்டைபாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்' என்ற கதையை சிம்புதேவனும், 'மிரேஜ்' கதையை எம். ராஜேஷும், 'கன்ஃபெஷன்' கதையை' வெங்கட் பிரபுவும் இயக்கியுள்ளனர்.

ரஞ்சித்தின் தம்மம் படத்திற்கு வரவேற்பு

ரஞ்சித்தின் தம்மம் படத்திற்கு வரவேற்பு

இந்த 4 கதைகளில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள 'தம்மம்' படத்திற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆதிக்க மனோநிலை கொண்ட பண்ணையாரால், விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு ஆளாகிறார் என்பதுதான் படத்தின் கதை,. இதை நுணுக்கமான அரசியல் காட்சிகளோடும், அழுத்தமான வசனங்களோடும் சேர்த்து, தம்மம் படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித். 'விக்டிம்' ஆந்தாலஜி படத்தில், ரஞ்சித்தின் தம்மம் கவனிக்க வைத்துள்ளது/

பா. ரஞ்சித் ஓப்பன் டாக்

பா. ரஞ்சித் ஓப்பன் டாக்

இந்நிலையில், 'விக்டிம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சிம்புதேவன் ஆகியோருடன் பா. ரஞ்சித்தும் இணைந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தனது திரை அனுபவங்கள் குறித்தும் அவர் மனம் திறந்தார். அதில், "சார்பட்டா பரம்பரை' தியேட்டரில் வெளியாகிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்" எனக் கூறிய ரஞ்சித், "ஓடிடியில் பாதிக்கு மேல் பார்க்க முடியாமல் எழுந்து போய்விட்டதாகத்" தெரிவித்துள்ளார்.

காலா தான் என்னோட பெஸ்ட்

காலா தான் என்னோட பெஸ்ட்

தொடர்ந்து பேசிய அவர், "சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'காலா' படம் வெற்றியா அல்லது தோல்வியா என விவாதிப்பதிலேயே நின்றுவிட்டது. ஆனால், எனக்கு படமாகவும், அதை உருவாக்கிய விதத்திலும் 'காலா' படமே என்னுடைய பெஸ்ட்" எனக் கூறினார். ரஜினி, ஈஸ்வரி ராவ், ஹூயுமா குரைஷி, நானா படேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், 2018ல் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X