காலா: ரஜினி போட்ட கணக்கு தப்பாகிடுச்சோ?
Recommended Video

சென்னை: காலா படம் ரஜினி ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்தது போன்று அமையவில்லை.
தலித் உரிமைகள் பற்றி பேசும் பா. ரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை எடுத்து வெற்றி கண்டார். ரஜினி மூலம் தான் கூற விரும்பியதை அழகாகவும், எளிதாகவும் தெரிவித்து மக்களை சென்றடைய வைத்தார்.
இதை பார்த்த ரஜினிக்கு ரஞ்சித்தின் யுக்தி புரிந்தது.

அரசியல்
கபாலியில் ரஞ்சித் தனது அரசியலை பேச அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து காலா படத்தில் தனது அரசியலை ரஜினி பேசுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் பெருமைப்பட்டனர்.

ரஞ்சித்
நேற்று வெளியான காலா ட்ரெய்லரை பார்த்ததுமே இது ரஜினி பேசும் அரசியல் இல்லை ரஞ்சித்தின் அரசியல் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. ரஜினி ஆதரவாளர்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. ரஜினி ஒரு கணக்கு போட வேறு மாதிரியாகிவிட்டது.

கருத்து
நிஜத்தில் ஏதாவது பிரச்சனை குறித்து கருத்து சொல்லவே நேரம் எடுத்துக் கொள்ளும் ரஜினி காலா படத்தில் மக்களை போராட அழைப்பதில் இருந்தே இது ரஞ்சித்தின் அரசியல் என்பது தெளிவாகிறது.

தமிழர்
ரஜினி என்ன தான் நான் தமிழன் தமிழன் என்று கூறினாலும் அவர் கன்னடர், மராட்டியர் என்று பலரும் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் காலா படத்தில் அவரை தமிழர் என்பதை உறுதிபடுத்துவது போன்று காட்சி வைக்கப்பட்டுள்ளது.

தமிழன்
காலா யாரு தாத்தா என்று கேட்கும் சிறுமியிடம் நானா படேகர் ராவணன் என்பார். ராவணன் என்பதன் மூலம் ரஜினியை தமிழராக முன்னிலைப்படுத்த முயற்சி செய்துள்ளார் ரஞ்சித். ரஜினி அரசியலோ, ரஞ்சித் அரசியலோ படம் நல்லா இருக்கும்போலயே என்பது தான் ரசிகர்களின் கருத்து.


Click it and Unblock the Notifications











