காலா 45 நிமிடக் காட்சிகள் பேஸ்புக்கில் லைவ்.. சிங்கப்பூரில் ஒருவர் கைது!

பேஸ்புக்கில் காலா படத்தை லைவ்வாக ஒளிபரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

Kaala review | காலா விமர்சனம் | Selfie Kulfie

சிங்கப்பூர்: ரஜினியின் காலா படத்தை பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பிய நபரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் ரிலீசாகியுள்ளது. தமிழகத்தில் நாளை (7ம் தேதி) ரிலீசாகிறது.

Kaala Live Streaming On FB : One arrested

இந்நிலையில், சிங்கப்பூர் கேத்தே திரையரங்கில் இப்படத்தை முதல் ஷோ பார்த்த பிரவீன் என்ற இளைஞர், திரையரங்கில் இருந்தபடியே படத்தை லைவ்வாக 45 நிமிடங்கள் பேஸ்புக்கில் ஒளிபரப்பினார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து அந்நாட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரவீனை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

காலா படத்தின் முதல் ஷோ தியேட்டரில் வெளியாகும் முன்னரே, அதனை இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் இளைஞர் ஒருவர் இப்படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்தது திரையுலகில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரவீன் ஏன் அவ்வாறு காலா படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்தார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. தொடர்ந்து போலீசார் அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X