Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பர்ஸ்ட் ஆப் மாஸ்... செகண்ட் ஆப் கிளாஸ்... காலா படத்தின் டிவிட்டர் விமர்சனம்!
காலா படத்தைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
சென்னை: ரஜினியின் காலா படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் டிவிட்டரில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள காலா படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில், இந்திய நேரப்படி நேற்றிரவே படம் ரிலீசாகி விட்டது.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தங்களது விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் படம் சூப்பராக இருப்பதாக பாராட்டியுள்ளனர்.
இதோ சில டிவிட்டர் பதிவுகள்...
|
2ம் பாதி ரஞ்சித் படம்:
காலா படத்தின் முதல் பாதி ரஜினி படங்களுக்கே உரிய மாஸ் எண்டர்டெயிண்மெண்ட். இரண்டாம் பாதி ரஞ்சித் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகள் உள்ளதாகவும், மொத்தத்தில் இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் சரியான விருந்து என்கிறார் இந்த ரசிகர்.
|
சக்தி வாய்ந்த வசனங்கள்:
படத்தில் அரசியல் நெடி அதிகம் என்றும், சக்தி வாய்ந்த வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், ரஜினியின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும் இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
|
கிளைமாக்ஸ் செம:
கபாலி படத்தைவிட காலா நன்றாக இருக்கிறது என்றும், அதிலும் குறிப்பாக கிளைமாக்சில் வரும் வண்ணமயமான பாடல் காட்சி வாவ் என்றும் இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
|
எல்லாமே சூப்பர்:
படையப்பாவிற்குப் பிறகு ரஜினிக்கு அமைந்த சிறந்த படம் காலா தான் என்கிறார் இந்த ரசிகர். மாஸ், கிளாஸ், கதை, நடிப்பு எல்லாமே நம்பர் ஒன் எனப் பாராட்டுகிறார் இவர்.
|
நானா படேகர்:
முதல் பாதியை விட இரண்டாம் பாதி சூப்பராக இருக்கிறது. குறிப்பாக நானா படேகரின் வில்லத்தனமும், ஈஸ்வரிராவ்வின் நடிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் அற்புதம் என்கிறார் இவர்.