காலா டிரெய்லர் இன்று ரிலீஸ்... ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் சொன்ன குட்நியூஸ்!
காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு ரிலீஸ் செய்யப்படுகிறது.
சென்னை: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் புதிய டிரெய்லர் இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கபாலி வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார். நாயகிகளாக இந்தி நடிகை ஹீமா குரோசி மற்றும் ஈஸ்வரிராவ் நடித்துள்ளனர். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அடுத்தமாதம் 7ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு வரும் படம் என்பதால் ஏற்கனவே காலா குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக இம்மாதம் 9ம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய ரஜினி, 'காலா அரசியல் படம் இல்லை, ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது' எனப் பேசி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார்.
அதோடு, காலாவின் முதல் டீசரில் வெளியான 'வேங்கையன் மகன் ஒத்தைல நிக்குறேன்...' டயலாக்கும் வைரலானது. எனவே, அந்தவகையில் இன்று வெளியாகும் டிரெய்லரில் என்ன மாதிரியான பஞ்ச் வசனம் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











