ரஜினி சினிமாவுக்கான மவுசு ஒரே ஒரு நாள்தானா? ஆன்லைன் புக்கிங் நிலவரம் இதுதான்!
காலா படத்துக்கான ஆன்லைன் புக்கிங் நிலவரம் இது.
Recommended Video

சென்னை: தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கான மவுசு என்பது இனி அவ்வளவுதானா என அதிரவைக்கிறது தமிழக தியேட்டர்களின் ஆன்லைன் புக்கிங் நிலவரம்.
ரஜினி சினிமா வெளியாகிறது என்றால் ஆகக் குறைந்தபட்சம் ஒருவாரமாவது ரசிகர்கள் இடைவிடாது தியேட்டர்களை ஆக்கிரமித்து விடுவார்கள். பொதுவாக அந்த முதல் ஒரு வாரம் என்பது ரசிகர்களுக்கானதாக இருக்கும்.
அதன்பின்னர்தான் பொதுமக்கள் சற்றே ஆசுவாசமாக தியேட்டர்களுக்கு செல்வார்கள். ஆனால் காலா படம் இன்று வெளியாவதற்கு முன்பிருந்தே சொல்லப்பட்ட ஒரு செய்தி பல தியேட்டர்களில் படம் ஆன்லைன் 'புக்கிங்' ஆகவில்லை என்பதுதான்.
இன்று படம் வெளியானதும் கூட ரசிகர்கள் ஆகப் பிரம்மாண்ட அளவில் கொண்டாடியதாகவும் தாக்கம் இல்லை. அதுவும் ரஜினி அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட பின்னர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது காலா. ஆனாலும் மிகப் பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவில்லை என்பதையே ஆன்லைன் புக்கிங் நிலவரங்கள் தெரிகிறது.

திண்டுக்கல் நிலவரம்
திண்டுக்கல்லில் புக்கிங் நிலவரத்தை தேடினோம். மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. ரசிகர்கள்தான் தியேட்டர்களில் குவிந்திருப்பார்கள் என பார்த்தால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை இன்று இரவும் டிக்கெட் கிடைக்கிறது. நாளை முழுவதும் காற்றுதான் வாங்கிக் கொண்டிருக்கிறது.

கோவையில் கொண்டாட்டம்
ஆனால் கோவை நிலவரம் அப்படி இல்லை. நாளையும் டிக்கெட்டுகள் கணிசமாக புக் ஆகி இருக்கின்றன.

திருச்சி ஓகே
திருச்சி நிலவரம் கோவையை விட சற்று குறைவுதான். ஆனாலும் பெரிய அளவிலான புக்கிங் என்பது இல்லாத நிலைமைதான்.

கண்டுகொள்ளாத மதுரை
மதுரை ஸ்ரீமீனாட்சி சினிமாஸில் நாளை ஷோ ஒன்றுக்கு டிக்கெட் தேடினேன். நாளை மாலை 4 மணி ஷோவுக்கு மொத்தம் 3 பேர்தான் புக்கிங் செய்துள்ளனர்.

மதுரையை விட ஈரோடு பரவாயில்லை
ஈரோடு லைட்டாக ஆறுதல் தரக் கூடியதாக இருக்கிறது. சுமார் 20 பேர் வரை புக்கிங் செய்திருக்கிறார்கள்.

ஈ ஓடும் காஞ்சி
காஞ்சிபுர நிலவரம் களேபரம். ஒருவர் கூட நாளை காட்சிகளுக்கு புக்கிங் செய்யாத நிலைமைதான் இருக்கிறது.

பெரம்பலூர்
திருச்சி போலவே பெரம்பலூரும் சற்று பரவாயில்லை ரகம்தான். சொற்ப எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம் எப்படி?
சரி தலைநகரமான சென்னை நிலவரம் எப்படி..வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் உள்ள ஐமாக்ஸை பார்த்தோம்.. அய்யோ சாமீ இப்படி பிரியாணியோடு காற்று வாங்குகிறதே!
என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!


Click it and Unblock the Notifications











