twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் நாள் வசூல்... "மலேசியா டான்" கபாலியை முந்த முடியாத "மும்பை தாதா" காலா!

    காலா திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது.

    |

    Recommended Video

    செம அடி வாங்கிய காலா வசூல்...விஷால் விளக்கம்!- வீடியோ

    சென்னை: ரஜினியின் காலா திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்று இந்தியாவில் சுமார் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படம் ரிலீசுக்கு முன்பே சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டது.

    Kaala opening day collection is Rs.30.50 crores nett


    ஆனால் முதல் நாளான நேற்று பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டமே இல்லை. ரஜினி படத்துக்கு முதல் நாளிலேயே சுலபமாக டிக்கெட் கிடைத்தது, ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது.
    ஆன்லைன் புக்கிங்கிளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களில் டிக்கெட் காலியாக இருக்கின்றன. எந்த தியேட்டரும் ஹவுஸ் புல்லானதாக தெரியவில்லை.
    இந்நிலையில் காலா திரைப்படம் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் காலா திரைப்படம் நேற்று ரூ14.50 கோடி தான் வசூலாகி இருக்கிறது. கபாலி படம் முதல் நாள் அன்று ரூ.21.50 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    பிற மாநிலங்களை பொறுத்த வரையில், 16 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. மொத்தமாக நேற்றைய தினம் மட்டும், காலா திரைப்படம் ரூ.30.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிய வருகிறது.
    பொதுவாக ரஜினி படங்கள் முதல் நாளிலேயே பல கோடி ரூபாய் கலெக்ஷன் அள்ளும். ஆனால் மிகந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான காலா படத்துக்கு வசூல் குறைய, பள்ளிகள் திறப்பு ரமலான் நோன்பு உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    English summary
    The Kaala movie has collected Rs.30.50 crores on its first day of release including all the verisons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X