தூத்துக்குடி விசிட் சர்ச்சைகள் எதிரொலி... சத்தமில்லாமல் வெளியான காலா வீடியோக்கள்!

காலா படத்தின் புரோமோ வீடியோக்கள் சைலண்டாக வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

அடுத்த வாரம் காலா ரீலிஸ் உறுதி- வீடியோ

சென்னை: ரஜினியின் காலா படம் தொடர்பான சில புரோமோ வீடியோக்களை வுண்டர்பார் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

பொதுவாக ரஜினி பட ரிலீஸ் என்றாலே அவரது ரசிகர்களுக்கு திருவிழா தான். படம் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பையும் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். கடந்த வாரம் காலா படத்தின் டிரெய்லர் வெளியானபோது கூட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் அதனை பார்த்து, டிரெண்ட்டாக்கினார்கள்.

ஆனால் ரஜினியின் தூத்துக்குடி விசிட்டுக்கு பிறகு இந்த நிலை சற்று மாறி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சர்ச்சையில் சிக்கிய ரஜினி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ரஜினி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். சென்னையில் அவர் அளித்த காரசாரமான பேட்டிக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்களும், எதிர்ப்பு குரல்களும் கிளம்பின. பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த ரஜினி, உடனடியாக தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

மக்கள் அதிருப்தி

இருப்பினும் ரஜினிக்கு எதிர்ப்பு அலை நிலைவுகிறது. படங்களில் போராட்டம் குறித்து பேசிய ரஜினி, நிஜத்தில் போராட்டங்களுக்கு எதிராக பேசியது மக்கள் மத்தியில் அருத்திப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்பு

இதற்கிடையே, கர்நாடகாவில் காலா படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பான ரஜினியின் பேச்சுக்கு கர்நாடக அரசியல் அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பே இதற்கு காரணம். இந்த காரணங்களால் காலா படம் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.

புதிய வீடியோக்கள் ரிலீஸ்

இந்நிலையில் நேற்று வுண்டர்பார் நிறுவனம், காலா படம் தொடர்பான சில வீடியோக்களை சைலண்டாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு விஷயத்தை வெளியிடும்போதும் முன்கூட்டியே டிவிட்டரில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய தனுஷ், இம்முறையை மேக்கிங் ஆப் காலா, புதிய டீசர், புரோமோ உள்ளிட்ட வீடியோக்களை சத்தமில்லாமல் வெளியிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X