பட்டையை கிளப்பிய காலா 'புயல்': ரஜினி படத்திலேயே சூப்பராக ஒரு வேலை செய்த ரஞ்சித்
Recommended Video

சென்னை: காலா படத்தில் ரஞ்சித் செய்துள்ள ஒரு விஷயம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கபாலியை அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7ம் தேதி ரிலீஸானது. முதல் நாள் வசூல் மந்தமாக இருந்தபோதிலும் விமர்சனம் நன்றாக வந்துள்ளது.
கபாலியை போன்றே காலாவும் ரஞ்சித் படம் தான்.

ஹீரோயின்கள்
ரஜினியின் பெரும்பாலான படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்காது. அவரை உருகி உருகி காதலித்து டூயட் பாடுவதுடன் ஹீரோயின்களின் வேலை முடிந்துவிடும்.

ரஞ்சித்
காலா படத்தில் ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, அஞ்சலி பாட்டில் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வலுவானதாக அமைந்துள்ளன. படத்தை பார்த்தவர்கள் ரஜினியை பற்றி மட்டும் அல்ல ஈஸ்வரி, ஹூமா, அஞ்சலி பற்றியும் பேசுகிறார்கள். இது ரஞ்சித் செய்த சாதனை என்றே கூற வேண்டும்.

புயல்
காலா படம் ரிலீஸான நாளில் இருந்து ரஜினிக்கு நிகராக பேசப்படுகிறார் புயல்(அஞ்சலி பாட்டில்). சமூக வலைதளங்களில் எல்லாம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறார் புயல். சமூக வலைதளம் பக்கம் சென்றாலே புயல், புயல் என்று ஒரே புயல் பேச்சாக உள்ளது.

இயக்குனர்கள்
உச்ச நடிகரான ரஜினியின் படத்தில் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் ரஞ்சித். இதை பிற இயக்குனர்களும் பின்பற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தனது கதாபாத்திரம் வலுவானது என்று ஈஸ்வரி ராவ் சொன்னது உண்மையாகிவிட்டது.

கதாபாத்திரம்
நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறார்கள். இந்நிலையில் ரஞ்சித்தின் புதிய டிரெண்ட் நடிகைகளை மட்டும் அல்ல அனைவரையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











