twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவை மண்டலத்தில் அதிக தியேட்டர்கள்.. தென் மாவட்டங்களில் மிக மிக குறைவு.. காலா ரிலீஸ் நிலவரம்

    மேற்கு மண்டலத்தில் அதிகம்... தென்மாவட்டங்களில் குறைவு... காலா ரிலீஸ் நிலவரம்!

    |

    Recommended Video

    தமிழகத்தில் 500 தியேட்டர்களில் காலா- வீடியோ

    சென்னை: காலா திரைப்படம் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது. ஆனால், காலா திரைப்படம் தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது என சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

    ஆனபோதும், நாம் விசாரித்த வரையில் கோவை மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், நீலகிரி , ஈரோடு ஆகிய பகுதிகளில் 98 தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.

    கபாலியைவிட அதிகம்

    கபாலியைவிட அதிகம்

    முன்னதாக இந்த மண்டலத்தில் ரஜினி - பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படம் 60 தியேட்டர்களில் மட்டுமே ரிலீசானது. ஆனால், காலா படம் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி

    மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காலா படத்தை திரையிட அதிகப்படியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, மதுரை ஏரியாவில் 10 தியேட்டர்களும், நெல்லை ஏரியாவில் 7 தியேட்டர்களும் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி நிலவரம் குறித்து சரிவர தெரியவில்லை.

    சென்னை நிலவரம்

    சென்னை நிலவரம்

    சென்னையைப் பொறுத்தவரையில் சத்யம் தியேட்டர்ஸ் மட்டுமே படத்தை திரையிடுவது உறுதியாகியுள்ளது. உதயம் தியேட்டர் படத்தை ரிலீஸ் செய்ய மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. கமலா தியேட்டரிலும் படம் ரிலீசாவது இழுபறியிலேயே இருக்கிறது.

    அதிக தியேட்டர்கள்

    அதிக தியேட்டர்கள்

    ஆனால், மொத்தமாக தமிழகத்தில் 500 தியேட்டர்களுக்கு குறையாமல் காலா ரிலீசாகும் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    The distributors are confident that the Rajini's Kaala movie will be screened in more than 500 theatres in Tamilnadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X