ரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும்? - வெளியான புதிய தகவல்!

By Vignesh Selvaraj

Recommended Video

'காலா' - 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்- வீடியோ

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்திருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் எனும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'காலா' படத்திற்கு சென்சார் போர்டு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. ஏப்ரல் 27-ம் தேதியே வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 7 ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kaala running time

ரஜினி படங்கள் நிச்சயமாக இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு குறைவாக இருக்காது என்பது ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான். 'கபாலி' படத்திற்கு 2 மணி நேரம் 52 நிமிடம் ரன்னிங் டைமாக இருந்தது. 'காலா' படம் அதைவிடச் சில நிமிடங்கள் குறைவாகவே ஓடவிருக்கிறது.

ரஜினி படத்தில் ரசிகர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் என்கேஜ் செய்ய நிறைய விஷயங்கள் இருக்கும். அதனால், இரண்டே முக்கால் மணி நேரம் என்பது நீளமாகத் தெரியாது. ரஜினியின் மாஸ் என்ட்ரியையும், ஸ்டைலான வசனங்களையும் கேட்க ரசிகர்கள் இப்போதே ரெடியாகி வருகிறார்கள்.

'காலா' படத்தின் இந்தி வெர்சனுக்கான போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் நானா படேகரும் முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளார். கரிகாலன் எனும் டைட்டிலில் சிக்கல் நீடிக்கும் நிலையில், 'கரிகாலன்' டேக் லைன் இந்தியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X