'காலா' டீசர் ரிலீஸ்... தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

By Vignesh Selvaraj

Recommended Video

காலா' டீசர் ரிலீஸ், ஆடியோ லாஞ்ச் எப்போ?

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. டீசர் ரிலீஸ் மற்றும் ஆடியோ லாஞ்ச்சுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம் தேதி வெளியாவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் சற்று முன்பு ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

காலா

காலா

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. 'காலா' வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

2.ஓ ரிலீஸுக்கு பதிலாக

2.ஓ ரிலீஸுக்கு பதிலாக

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டபோதும், '2.O' படத்திற்காக காலா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். அதனால் காலா டீசர் வெளியீட்டையும் தள்ளி வைத்திருந்தனர். தற்போது '2.O' தள்ளிப் போனதால், அந்தப் படம் வெளியாகயிருந்த ஏப்ரல் 27--ம் தேதி 'காலா' திரைக்கு வருகிறது.

காலா டீசர்

காலா டீசர்

இந்நிலையில், 'காலா' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என தனுஷ் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. "இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்லல..? பாப்பீங்க!" எனும் வசனம் இந்த டீசரில் இடம்பெற இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X