உண்மையாகவே இது 'காலா' டீசரா? வைரலாகும் வீடியோ!
Recommended Video

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'காலா' படத்தின் டீசர் இன்று வெளியாவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் முன்பு ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக 'காலா' படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

இந்நிலையில், 'காலா' படத்தின் டீசர் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காலா டீசருக்காக, ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இந்த டீசரின் தொடக்கத்தில் 'RAJNI' எனவும், இறுதியில் 'RAJINI' எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒரிஜினல் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், ஒரிஜினல் போலவே நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
"நான் கால் வைக்கிறதும் வைக்காததும் உன் தல இருக்கிறதும் இருக்காததும் உன் கையில தான் இருக்கு" என ரஜினி பேசுமாறு வசனமும் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது. டீசர் ரிலீஸ் தள்ளிப்போனதால், படக்குழுவில் யாரும் லீக் செய்தார்களா எனத் தெரியவில்லை. இதுதான் உண்மையான டீசரா என்பது நாளை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











