'காலா' டீசர் ரிலீஸ் தள்ளிவைப்பு.. தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

By Vignesh Selvaraj

Recommended Video

காலா டீசர் தள்ளிவைப்பிற்கும் காலா டீசர் லீக்கிற்கும் என்ன சம்பந்தம்?- வீடியோ

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம் தேதி (இன்று) வெளியாக இருந்தது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. 'காலா' வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக 'காலா' படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

Kaala teaser postponed to march 2

டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் தனுஷ். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தள்ளிவைப்பு அறிவிப்பில் டீசர் ரிலீஸ் மார்ச் 2 என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, ரசிகர்களை அதிகமாகக் காக்க வைக்காமல் நாளை காலையே வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X