ரஜினியின் காலா டீசர்... புதிய சாதனை!

By Shankar

Recommended Video

காலா டீஸர் பற்றிய ஒரு அலசல் : #kaalateaser

சென்னை: ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் டீசர் புதிய சாதனைப் படைத்துள்ளது. இந்த டீசர் 24 மணிநேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே திருட்டுத்தனமாக ஆன்லைனில் சிலர் லீக் செய்தனர். இதனால் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே டீசரை வெளியிட்டார் தயாரிப்பாளர் தனுஷ்.

Kaala teaser sets new record

இதனால் யுட்யூபில் டீசருக்கான பார்வைகள் எண்ணிக்கை சற்று மந்தப்பட்டது. ஆனால் 24 மணி நேரத்தில் இந்தப் படத்தின் டீசரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 13 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்திய அளவில் இது புதிய சாதனையாகும். இன்று இரவு 12 மணிக்குப் பிறகு காலா டீசர் பார்வையாளர் எண்ணிக்கை 20 மில்லியனைத் தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் கபாலி பட டீசருக்கு 34 மில்லியன் பார்வைகள் கிடைத்தன. ஆனால் அதனை இன்னும் சில தினங்களிலேயே காலா பட டீசர் தாண்டிவிடும் என்கிறார்கள்.

Kaala teaser sets new record

இதுவரை வெளியான ரஜினி படங்களிலேயே குறுகிய காலத்தில் அதிக பார்வைகள் கிடைத்திருப்பது காலா ட்ரைலருக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X