twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடி, பிஜேபி-க்கு எதிராகப் பேசும் 'காலா' டீசர்'!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    காலா டீஸர் பற்றிய ஒரு அலசல் : #kaalateaser

    சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே மாஸ் தெறிக்கும். ரஞ்சித்துடன் ரஜினி கூட்டணி வைத்தபிறகு மாஸ் மட்டுமின்றி கிளாஸாகவும் செம்ம ஸ்கோர் செய்கிறார் ரஜினி.

    இந்நிலையில் 'காலா' டீசர் வெளிவந்து பிரமாண்ட வரவேற்பு பெற, இதில் பல குறியீடுகள் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

    வெளியானது முதலே, செம ட்ரென்டிங்கில் இருக்கும் 'காலா' டீசர் மூலம் ரஜியை வைத்து மோடியையும், பிஜேபி-யையும் விமர்சித்திருப்பதாகவும், சமூக வலைதளங்களில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினி பேசியிருக்கும் வசனங்கள் செம வைரலாகி வருகிறது. ரஜினி இப்படத்தின் புகைப்படத்தில் 'இராவண காவியம்' புத்தகத்தை மேஜையில் வைத்திருப்பது தெரிகிறது. இந்தப் புத்தகம் இராமயணத்தை எதிர்க்கும் விதமாகவும், ஆரியத்தை எதிர்த்து திராவிடம் பேசும் விதமாகவும் உருவாக்கப்பட்டது.

    பிஜேபி-க்கு எதிர்ப்பு

    பிஜேபி-க்கு எதிர்ப்பு

    1946-ம் ஆண்டு வெளியான இப்புத்தகத்தை புலவர் குழந்தை எழுதினார். இந்தப் புத்தகத்திற்கு 1948 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டு பின், 1971-ல் மீண்டும் வெளியிடப்பட்டது. இராமனைப் புகழும் பிஜேபி-க்கு இது எதிர்ப்பைப் பதிவு செய்வதாகவே இருக்கிறது.

    மோடி எதிர்ப்பு

    மோடி எதிர்ப்பு

    பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு வாசகம் க்ளீன் இந்தியா தான். அதைக் குறிக்கும் ஒரு வசனத்தை டீசரில் வில்லன் நானா படேகர் சொல்ல, அதை ரஜினி எதிர்த்து பேசுகிறார். இதனால், மோடிக்கு எதிராக மறைமுகமாக சில வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    காவி இல்லை

    காவி இல்லை

    கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்களும் இல்லை, வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை என்பதையும் உணர்த்தும் விதமாக வசனம் இடம்பெறுகிறது. தேசியக்கொடியில் காவி நிறத்திற்கு பதிலாக வேறு கலர், ஒடுக்கப்பட்டோர் பேனர் வாசகம் என டீசரிலேயே குறியீடுகள் இருக்கின்றன.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    'காலா' போஸ்டர் ஒன்றில் சுவரில் கார்ல் மார்க்ஸ் படம் இருப்பதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது எல்லோரது எண்ணமும் டீசரிலேயே இத்தனை குறியீடு என்றால் படத்தில் எவ்வளவு இருக்கும் என்பதே.

    English summary
    Fans are talking about the 'kaala' Teaser, which has a lot of cues to get the grand reception. Modi and BJP has been criticized by Ranjith via rajini in 'Kaala' Teaser.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X