உடம்பு தான் ஆயுதம், போராட வாங்க: காலா ட்ரெய்லர் எப்படி இருக்கு?
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ட்ரெய்லர் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் அமிதாப் பச்சன் வரும் விளம்பரத்துடன் துவங்குகிறது.
ரஜினி கருப்பு, வேட்டி சட்டையில் அதிரடியாக உள்ளார்.
ட்ரெய்லர்
காலா ட்ரெய்லர் அனைவருக்கும் பிடித்துள்ளது. ட்ரெய்லரை பார்த்ததுமே இது ரஜினி படம் அல்ல பா. ரஞ்சித் படம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அருமை
உடம்பு தான் நமக்கு ஆயுதம், நிலம் உங்களுக்கு அதிகாரம் எங்களுக்கு வாழ்க்கை என்று ரஜினி கூறும் வசனங்கள் அருமை. காலா யாரு தாத்தா என்று கேட்கும் சிறுமியிடம் ராவணன் என்று நானா படேகர் கூறுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஜினி
தன் வயதுக்கேற்ற பெண்களுடன் நடிக்க விரும்புவதாக கூறிய ரஜினி ஈஸ்வரி ராவிடம் ஐ லவ் யூ டி என்று சொல்லும் அழகு ரசிக்கும்படியாக உள்ளது. ஈஸ்வரி ராவ் காலா மனைவியாகவே மாறியுள்ளார்.

ஜரினா
மனைவி, குடும்பத்தை அதிகமாக நேசிக்கும் காலா பத்திரிகையாளரான ஜரினாவிடம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் நிச்சயம் படத்தில் அதற்கு விளக்கம் வைத்திருப்பார்.


Click it and Unblock the Notifications











