காலா இன்னிக்கும் ட்விட்டரில் ட்ரெண்டடிக்குது... காரணம் என்ன தெரியுமா? #Kaala
ரஜினிகாந்தின் காலா படம்தான் சமீப நாட்களில் அதிக அளவு சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்த படம்.
காலா குறித்த செய்திகள் ஏதாவது வெளியானால் போதும், அடுத்த சில நிமிடங்களில் அந்தப் படம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறது.

அண்மையில் படத்தின் டீசர் வெளியானது. இதைத் தொடர்ந்து ஒரு வார காலம் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யு ட்யூபில் ட்ரெண்டிங்கில் இருந்தது காலா.
அடுத்து படத்தின் ரிலீஸ் தேதி வெளியான போதும், டீசர் பார்வை எண்ணிக்கை 2 கோடிகளைக் கடந்தபோதும் காலா ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது.
படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 27 இல்லை என ஒரு யூகம் வெளியாக அதையும் ட்ரெண்டாக்கினர் மக்கள்.
இன்றும் காலா ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறது. காரணம், படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் அளித்துள்ள ஒரு விளக்கம்.
"காலா படம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதுகுறித்து நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல," என லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்துதான் காலா மீண்டும் வைரலாகியுள்ளது.
சரி, ரிலீஸ் தேதி எதுன்னு எப்போ சார் கன்பர்ம் பண்ணுவீங்க?


Click it and Unblock the Notifications











