ரஜினியின் 'காலா' படத்தையும் இந்த நிறுவனம்தான் வெளியிடுதாம்!
சென்னை : ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் 'காலா' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாக இருக்கிறது. தனுஷ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் வெளியிட இருக்கிறதாம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் '2.ஓ'. இந்தப் படத்தில் ரஜினியுடன் அக்ஷய்குமார், எமி ஜாக்ஸன் உள்பட பலர் நடித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ விழா நேற்று துபாயில் நடைபெற்றது.

இப்படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு வெகு பயங்கரமாக ப்ரொமோஷன் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம்தேதி இந்தப் படம் உலகமெங்கிலும் வெளியாகிறது.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இன்னொரு கேங்ஸ்டர் படம் 'காலா'. இந்தப் படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டில் திரைக்கு வரும் இந்த 'காலா' படத்தையும் லைகா நிறுவனமே வெளியிடுகிறதாம்.
இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்ட நிலையில், விரைவில் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக தனுஷ் அறிவிப்பார் என்று தெரிகிறது. லைகா நிறுவனம் வெளியிட்டால் இந்தப் படத்தின் ப்ரொமோஷனும் செமையாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











