என் காளி வினோதமானவள்..அவள் முதலாளித்துவத்தை அழிப்பாள்.. லீனா மணிமேகலை காட்டம்!
சென்னை : காளி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய லீனா மணிமேகலை புதிய ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார். அதில், என் காளி வினோதமானவள், அவள் முதலாளித்துவத்தை அழிக்கிறாள் என கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் திறமைகளைக் கொண்டவர் லீனா மணிமேகலை.
பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். பல சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

லீனா மணிமேகலை
ஜூலை2ந் தேதி கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'ரிதம்ஸ் ஆஃப் கனடா' என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை இயக்கிய காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து, காளி போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் லீனா மணிமேகலை. அந்த போஸ்டர் தற்போது பெரும் புயலை கிளப்பி வருகிறது.

காளி போஸ்டர் சர்ச்சை
நாடக பாணியிலான உருவாகி உள்ள அந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் LGBTQ கொடியும், மற்றொரு கையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், மதத்தை புண்படுத்திவிட்டதாக கூறி லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ்
இதற்கு லீனா மணிமேகலை, கனடாவின் டொராண்டோவின் தெருக்களில் ஒரு பெண் உலா வருவதைப் பற்றிய ஆவணப்படம் தான் இது என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால், பிரச்சனை பூதாகரமாகியதை அடுத்து, கனடாவின் ஆகா கான் அருங்காட்சியகம் ஆவணப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அகற்றி, வருத்தமும் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்து அமைப்புகள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
Recommended Video

என் காளி வினோதமானவள்
இந்நிலையில், லீனா மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என் காளி வினோதமானவள், அவள் சுதந்திரமானவள், ஆணாதிக்கத்தின் மீது உமிழ்கிறாள், அவள் இந்துத்துவாவை சிதைக்கிறாள், அவள் முதலாளித்துவத்தை அழிப்பாள், அவள் அனைவரையும் தன் ஆயிரம் கரங்களால் அரவணைக்கிறாள் என காளி புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











